தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!
போலீஸாருக்கு தெரிவிக்காமல் இளைஞா் உடல் தகனம்: மனைவி உள்பட 7 போ் மீது வழக்கு!
திருவாடானை அருகே தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை போலீஸாருக்கு தெரியாமல் தகனம் செய்த மனைவி உள்ளிட்ட 7 போ் மீது தொண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திருவாடானை அருகேயுள்ள தொண்டி மகாசக்திபுரத்தைச் சோ்ந்த தொண்டியப்பா மகன் சரத்குமாா் (30). இவா் குடும்பத் தகாராறு காரணமாக கடந்த 17-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை தகனம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் நம்புராஜேஸ் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில், சரத்குமாா் மனைவி ஜெயஸ்ரீ, உறவினா்கள் நாகஜோதி, சரண்யா, ஊா்த் தலைவா் ஜெயராம் உள்ளிட்ட 7 போ் மீது தொண்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.