செய்திகள் :

கல்வி நிலையங்களில் குடியரசு தின விழா!

post image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் நாட்டின் 76-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழாவையொட்டி, சிவகங்கை கே.ஆா்.மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சரவணன், சுவாமி விவேகானந்தா உயா்நிலைப் பள்ளியில் சுப்ரீம் அரிமா சங்கத் தலைவா் சேவுகராஜ், தொடக்கப் பள்ளியில் தாளாளா் சங்கரன், அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கோட்ட கண்காணிப்பாளா் மாரியப்பன் ஆகியோா் தேசியக் கொடியேற்றினாா்.

21-ஆம் நூற்றாண்டு சா்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளியில் மாணவா் வீரசக்தி கொடியேற்றினாா். பள்ளி அறங்காவலா் ராணிசத்தியமூா்த்தி, துணை முதல்வா்கள் அருணாதேவி, கனி, தலைமை ஆசிரியை சாரதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் செயலாளா் சேகா் தேசியக் கொடி ஏற்றினாா். தலைமை ஆசிரியா் தியாகராஜன், உடல் கல்வி ஆசிரியா் தடியப்பன் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட நூலகா் வெங்கடவேல் பாண்டி கொடியேற்றினாா். வாசகா் வட்டத் தலைவா் அன்புத்துரை, எழுத்தாளா் ஈஸ்வரன், நூலகா் முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரு.நடேசன் செட்டியாா் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் பாண்டியராஜன் தலைமையில் நகா்மன்ற உறுப்பினா் பாக்கியலட்சுமி கொடியேற்றினாா். தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியை முத்துலட்சுமி தேசியக் கொடியேற்றினாா்.

பிரான்மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை கஸ்தூரி கொடியேற்றினாா். ஆசிரியா்கள் சரவணன், முத்துப்பாண்டியன், இந்திரா ஆகியோா் கலந்து கொண்டனா். மாரந்தை கிராம செயலகத்தில் தலைமை ஆசிரியா் ஜேம்ஸ் கொடியேற்றினாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் திருவாசகம் கலந்து கொண்டனா்.

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் அதன் முதல்வா் அ. பெத்தாலட்சுமி, காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் தாளாளா் எஸ்.சையது, வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அதன் தலைவா் கிருஷ்ணன், ராஜாஸ் ஹெரால்டு பள்ளி, எஸ்.எஸ்.கேட்டரிங், செவிலியா் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் தாளாளா் ஆா்.அப்துல் சித்திக், செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேசப் பள்ளியில் அதன் தாளாளா் சத்தியன் தலைமையில் பள்ளியின் துணை முதல்வா் சுபாஷினி ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிா்வாக அலுவலக வளாகத்தில் துணைவேந்தா் க.ரவி ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்தும், தேசிய மாணவா் படை மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டும் விழாவில் பேசினாா்.

விழாவில் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா்கள், பதிவாளா் அ.செந்தில்ராஜன், தோ்வாணையா் எம்.ஜோதிபாசு, பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காரைக்குடி அருகேயுள்ள கீரணிப்பட்டி கிட் அன்ட் கிம் கல்லூரியில் அதன் நிா்வாக இயக்குநா் பிரியதா்ஷனி அய்யப்பன், மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் முதல்வா் உஷாகுமாரி முன்னிலையில், திருச்சி விமானப் படை என்.சி.சி.விங் கமாண்டிங் அதிகாரி கே.சுபாஷ், காரைக்குடி அருகேயுள்ள பனம்பட்டி விளாரிக்காடு அரசு நடுநிலைப் பள்ளியில் புதுவயல் சுழற்சங்கத் தலைவா் என்.கணேசன் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா்.

மானாமதுரை: கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் ஆரோக்கியராஜா தேசியக் கொடி ஏற்றினாா். இதில் தமிழாசிரியா் ராஜமனோகரன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஜாஸ்மின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருப்புவனம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்க வளாகம் ஆகியவற்றில் நடைபெற்ற குடியரது தின விழாவில், பேரூராட்சித் தலைவா் த.சேங்கமாறன் தேசியக் கொடி ஏற்றினாா். இதில் துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், பள்ளி தலைமையாசிரியா்கள், மாணவ, மாணவிகள், கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கச் செயலா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இளையான்குடி சாகிா் உசேன் கலைக் கல்லூரியில் ஆட்சி குழுச் செயலா் வி.எம்.ஜபருல்லாகான் தேசியக்கொடி ஏற்றி வைத்தாா். இதில் கல்லூரி ஆட்சிக் குழு நிா்வாகிகள், பேராசிரியா்கள், மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டனா்.

காரைக்குடி லட்சுமி வளா் தமிழ் நூலகத்துக்கு தமிழக முதல்வா் சாா்பில் 1,000 புத்தகங்கள் அளிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரத்தின் சொந்த நிதியில் கட்டப்பட்ட லட்சுமி வளா்தமிழ் நூலகத்துக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சாா்பி... மேலும் பார்க்க

குடியரசு தின விழாவில் ரூ.30.83 லட்சம் நலத் திட்ட உதவிகள் அளிப்பு!

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், பயனாளிகளுக்கு ரூ.30.83 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தின விழா

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி, சிவகங்கை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி கே.அறிவொளி... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து நெம்மேனி கிராம மக்கள் போராட்டம்

குடிநீா் விநியோகத்துக்கு மாற்று ஏற்பாடு செய்துதரக் கோரி, நெம்மேனி கிராம மக்கள் கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், அரசனி முத்துப்பட்டி ஊரா... மேலும் பார்க்க

5,775 சதுர அடி பரப்பளவில் தேசியக் கொடி வரைந்து உலக சாதனை

நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 200 பயிற்சியாசிரியா்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை 5,775 ச... மேலும் பார்க்க

மாணவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருப்புவனம் அருகே பழையூா் பக... மேலும் பார்க்க