2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஆப்கானிஸ்தான் வீரர்!
மாணவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருப்புவனம் அருகே பழையூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆதித்யா (20). கல்லூரி மாணவரான இவா், கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவியை காதலித்தாா். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவா் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதில் அந்த மாணவி கா்ப்பமானாா்.
இதுகுறித்து மானாமதுரை மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஆதித்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.