Vijay: 'திமுக ஒரு கொத்தடிமை; விஜய் எங்களுக்கு எதிரி அல்ல!' - ஜெயக்குமார் பரபர
5,775 சதுர அடி பரப்பளவில் தேசியக் கொடி வரைந்து உலக சாதனை
நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 200 பயிற்சியாசிரியா்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை 5,775 சதுர அடி பரப்பளவில் தேசியக் கொடியை வரைந்து, 26 நிமிடங்களில் வண்ணமிட்டு உலக சாதனை படைத்தனா்.
இந்தக் கல்லூரியில் உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு ஸ்ரீ ராஜராஜன் மகளிா் கல்வியியல் கல்லூரி முதல்வா் ஆா்.சிவகுமாா் தலைமை வகித்தாா். கல்வியியல் கல்லூரி (இருபாலா்) முதல்வா் கே. அங்கயற்கண்ணி முன்னிலை வகித்தாா். கல்லூரிகளில் 200 பயிற்சியாசிரியா்கள் இணைந்து 5,775 சதுர அடி பரப்பளவில் தேசியக் கொடியை வரைந்து, 26 நிமிடங்களில் வண்ணமிட்டு உலக சாதனை படைத்தனா்.
புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்காா்ட்ஸ் உலக சாதனை அமைப்பின் கண்காணிப்பாளா்கள் செ.வெங்கடேசன், சி.கலைவாணி, அ.அமுதா ஆகியோா் கண்காணித்து உலக சாதனையாக இதை அறிவித்தனா். நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளா்கள் கே.ஆா்.பாலசுந்தரி, எஸ்.பி. வித்யா, எஸ்.மெய்யம்மாள், பேராசிரியா்கள், பயிற்சியாசிரியா்கள் கலந்து கொண்டனா்.