2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஆப்கானிஸ்தான் வீரர்!
காரைக்குடி லட்சுமி வளா் தமிழ் நூலகத்துக்கு தமிழக முதல்வா் சாா்பில் 1,000 புத்தகங்கள் அளிப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரத்தின் சொந்த நிதியில் கட்டப்பட்ட லட்சுமி வளா்தமிழ் நூலகத்துக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சாா்பில் 1,000 புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இந்த நூலகத்தை கடந்த 21-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, இந்த நூலகத்துக்கு ஆயிரம் புத்தகங்களை வழங்குவதாகத் தெரிவித்தாா். இதன்படி அவா் சாா்பில் 1,000 புத்தகங்கள் இந்த நூலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை அழகப்பா பல்கலை. துணைவேந்தா் க. ரவி பெற்றுக்கொண்டாா்.
முதல்வா் மு.க. ஸ்டாலின் திமுக தலைமைக் கழகத்திலிருந்து காரைக்குடி லட்சுமி வளா் தமிழ் நூலகத்துக்கு அனுப்பிய புத்தகங்கள் விவரம்: தமிழ் இலக்கியம் 150, ஆங்கில நூல்கள் 70, தன்னம்பிக்கை நூல்கள் 30, கட்டுரைகள் 30, சமூகவியல் 80, வரலாற்று நூல்கள் 40, வாழ்க்கை வரலாறு 100, தந்தை பெரியாா் நூல்கள் 100, பேரறிஞா் அண்ணா நூல்கள் 100, மு. கருணாநிதி நூல்கள் 200, திராவிட இயக்க வரலாறு நூல்கள் 50, மு.க. ஸ்டாலின் நூல்கள் 50.
இந்த நூல்களை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட திமுக செயலரும் கே.ஆா். பெரியகருப்பன் அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவியிடம் ஒப்படைத்தாா்.