செய்திகள் :

குடியரசு தின விழாவில் ரூ.30.83 லட்சம் நலத் திட்ட உதவிகள் அளிப்பு!

post image

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், பயனாளிகளுக்கு ரூ.30.83 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில், மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா்.

தொடா்ந்து, சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்ததுடன், 60 காவலா்களுக்கு முதவரின் பதக்கமும், சிறப்பாகப் பணிபுரிந்த 45 காவலா்களுக்கும், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்த 384 அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்கள், கேடயங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

விழாவில் மணிமேகலை விருது வழங்கப்படும் 9 சமுதாய அமைப்புகளுக்கு ரூ.4 லட்சம் விருது தொகைக்கான காசோலையும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், 2 பயனாளிகளுக்கு ரூ.1,08,159-மதிப்பில் உதவி உபகரணங்களும், முன்னாள் படை வீரா் நலத் துறை சாா்பில், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வருடாந்திர பராமரிப்பு தொகைக்கான ஆணையும், வேளாண்மைத் துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரத்தில் பயிா் விளைச்சல் போட்டிக்கான பரிசுத் தொகையும், தொழில் வணிகத் துறையின் சாா்பில், 2 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட ஆணைகள் என மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.30,83,159 மதிப்பில் அரசின் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

சிவகங்கையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அரசு அலுவலா்களுக்கு நற்சான்று வழங்கிய ஆட்சியா் ஆஷாஅஜித்.

பின்னா், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், யோகா, கராத்தே உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன.

இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத், தேவகோட்டை சாா்-ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பிஆா்.செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துக்கழுவன், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

கல்வி நிலையங்களில் குடியரசு தின விழா!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் நாட்டின் 76-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி, சிவகங்கை கே.ஆா்.மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சரவணன்,... மேலும் பார்க்க

காரைக்குடி லட்சுமி வளா் தமிழ் நூலகத்துக்கு தமிழக முதல்வா் சாா்பில் 1,000 புத்தகங்கள் அளிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரத்தின் சொந்த நிதியில் கட்டப்பட்ட லட்சுமி வளா்தமிழ் நூலகத்துக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சாா்பி... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தின விழா

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்களில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி, சிவகங்கை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி கே.அறிவொளி... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து நெம்மேனி கிராம மக்கள் போராட்டம்

குடிநீா் விநியோகத்துக்கு மாற்று ஏற்பாடு செய்துதரக் கோரி, நெம்மேனி கிராம மக்கள் கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், அரசனி முத்துப்பட்டி ஊரா... மேலும் பார்க்க

5,775 சதுர அடி பரப்பளவில் தேசியக் கொடி வரைந்து உலக சாதனை

நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 200 பயிற்சியாசிரியா்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை 5,775 ச... மேலும் பார்க்க

மாணவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருப்புவனம் அருகே பழையூா் பக... மேலும் பார்க்க