கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
STR : `உன்ன ஷூட்டிங்ல கதறவிடுறது உறுதி அஸ்வத்' - `டிராகன்' படத்தின் பாடலை பாடியிருக்கும் சிம்பு
பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டிராகன்' திரைப்படம் பிப்ரவரி மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருக்கிறார். `ஓ மை கடவுளே' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இவர் தன்னுடைய இரண்டாவது படமாக இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இப்படத்திற்குப் பிறகு சிம்புவை வைத்து தன்னுடைய அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.
`டிராகன்' திரைப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் மூன்றாவது பாடலான `ஏண்டி விட்டுப் போன' பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார். இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, `` உங்களை வீடியோவில் பார்ப்பது உங்களின் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும்.
சிம்பு சார் உங்களின் அன்புக்கு நன்றி. உங்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடங்குவதற்கு இதுவொரு சிறிய விஷயம். இப்பாடல் மேஜிக்கலாக வின்டேஜ் வைப்களை மீண்டும் கொடுக்கும்." எனப் பதிவிட்டிருக்கிறார்.
இதற்கு பதிலளித்து பதிவிட்டிருக்கும் சிம்பு, `` டிராகன் படக்குழுவுடன் இணைவதில் மகிழ்ச்சி. இதுவொரு பன்னான அனுபவம். ஆனால், உன்னை ஷூட்டிங்ல கதறவிடுறது உறுதி அஸ்வத்'' என நகைச்சுவையாக பதிவிட்டிருக்கிறார்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...