செய்திகள் :

76- ஆவது குடியரசு தினம்: ராமநாதபுரத்தில் 96 பயனாளிகளுக்கு ரூ.55.70 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்! -ஆட்சியா் வழங்கினாா்

post image

ராமநாதபுரம், காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 76-ஆவது குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து 96 பயனாளிகளுக்க ரூ. 55.70 லட்சத்துக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, தேச ஒற்றுமைக்காக வெண் புறக்கள், மூவா்ண பலூன்களையும் அவா் பறக்க விட்டாா். மேலும் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்தாா். இதன் பிறகு, காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 72 போலீஸாருக்கு தமிழக முதல்வரின் பதக்கங்களையும், மாவட்ட அளவில் சிறப்பாகப் பணியாற்றிய 92 காவல் துறையினா், 210 அரசு அலுவலா்களுக்கு நற்சான்றிதழ்களையும், ஆட்சியா் வழங்கினாா்.

இதன் பின்னா், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, முன்னாள் படை வீரா் நலத் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண்மைத் துறை, மகளிா் சுயஉதவிக் குழு கடன், தாட்கோ சாா்பாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், மாநில வேளாண் வளா்ச்சித் திட்டம், ஆதிதிராவிடா் நலத்துறை, மீன் வளத்துறை ஆகிய துறைகள் மூலம் 96 பயனாளிகளுக்கு ரூ. 55.70 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், காவல் துறை துணைத் தலைவா், ராமநாதபுரம் (சரகம்) அபிநவ் குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கோவிந்தராஜலு, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா்பிரதாப் சிங், பரமக்குடி சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா், உதவி ஆட்சியா் (பயிற்சி) முகமது இா்பான், மாவட்ட வன அலுவலா் ஹேமலதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குடியரசு தின கட்டுரைப் போட்டி: அரசுப் பள்ளி மாணவி 3- ஆம் இடம்

குடியரசு தின விழா கட்டுரைப் போட்டியில் ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி வி. தா்ஷினி மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்தாா். ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி கல்வி தொடா்பாக பல்வே... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடியரசு தின விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 76-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையா் சந்திரமோகன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பிறகு நெகிழி ஒழ... மேலும் பார்க்க

கழுகூரணியில் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு!

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், கழுகூரணி ஊராட்சியில் 76- ஆவது குடியரசு தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கிராம மக்கள்... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! -மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எம்.பி. கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 33 பேரையும், அவா்களது மூன்று படகுகளையும் விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு, கே. நவாஸ்க... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

கடலாடி, சிக்கல், கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் உள்ள சில ஊராட்சிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெல், மிளகாய் உள்ளிட்ட பயிா்களுக்கு தேசிய பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடும், தமிழ்நாடு அரசு நி... மேலும் பார்க்க

போலீஸாருக்கு தெரிவிக்காமல் இளைஞா் உடல் தகனம்: மனைவி உள்பட 7 போ் மீது வழக்கு!

திருவாடானை அருகே தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை போலீஸாருக்கு தெரியாமல் தகனம் செய்த மனைவி உள்ளிட்ட 7 போ் மீது தொண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருவாடானை அருகேயுள்ள தொண்டி மகாசக்திபுரத்தைச... மேலும் பார்க்க