செய்திகள் :

Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா?

post image

Doctor Vikatan: எனக்கு வயது 40. பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அதற்காக  மூன்று மாதங்கள் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டேன். அதன் பிறகு சுகர் டெஸ்ட் செய்தபோது எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் என்று வந்தது. எனக்கு அத்தனை வருடங்களாக இப்படி வந்ததே இல்லை. 3 மாதங்கள் சாப்பிட்ட வாழைப்பழம்தான் காரணமோ என அதை நிறுத்திவிட்டு  மறுபடி சுகர் டெஸ்ட் செய்து பார்த்தபோது ப்ரீ டயாபட்டீஸ் இல்லை என்று வந்தது. வாழைப்பழம் சாப்பிட்டால், சுகர் இல்லாதவர்களுக்கும் சுகர் வருமா...? சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம் என்று சொல்கிறார்களே... இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி 

மருத்துவர் சஃபி சுலைமான்

ப்ரீ டயாபட்டீஸுக்கும் வாழைப்பழத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது வாழைப்பழம் சாப்பிடுவோர் எல்லாம் ப்ரீ டயாபட்டிக்காக மாறுவதில்லை. ப்ரீ டயாபட்டிக்காக இருக்கும் எல்லோரும் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவோராகவும் இருப்பதில்லை.

டயாபட்டீஸ் என்பது உடலின் வளர்சிதை மாற்றம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை. மலச்சிக்கல் பிரச்னைக்காக தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். மலச்சிக்கல் இருந்தால் வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பது காலங்காலமாக நம் மனதில் பதிந்து போன விஷயமாக இருக்கிறது. ஆனால், மலச்சிக்கலுக்கான காரணத்தை முதலில் கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். அதன் பிறகு தினமும் வாழைப்பழம் சாப்பிட வேண்டிய அவசியமே இருக்காது. 

நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பது போன்ற பழக்கங்களைக் கடைப்பிடித்தாலே சிரமமின்றி மலம் வெளியேறும்.  மலச்சிக்கலுக்கு தினமும் வாழைப்பழம் தான் சாப்பிட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

(pre-diabetes)

இங்கே இன்னொரு விஷயத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை. அதற்கேற்ற உடல் உழைப்பைக் கொடுக்கிறீர்களா என்பதுதான் முக்கியம்.  அதைத் தவிர்த்து வாழைப்பழம் சாப்பிட்டதால் சுகர் வந்துவிட்டதாகச் சொல்வதில் அர்த்தமும் இல்லை, அறிவியல்பூர்வமான உண்மையும் இல்லை. 

உடல் இயக்கம் சார்ந்த பிரச்னையான நீரிழிவு என்பது நம் உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, வயது போன்ற விஷயங்களால் தீர்மானிக்கப்படுவது. வாழைப்பழத்தை நிறுத்தியபிறகு டெஸ்ட் செய்ததில் சுகர் இல்லை என்று வந்ததாகச் சொல்லியிருப்பது நல்ல விஷயம். நீங்கள் உங்கள் உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள். மலச்சிக்கலுக்கான காரணம் தெரிந்து, அதற்கும் சிகிச்சை எடுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

US: ``கைகளில் விலங்கு; தண்ணீர், கழிவறைக்கு தடை" -கதறிய மக்கள்; டிரம்ப் செயலால் கொதிக்கும் பிரேசில்

'அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவேன்' - இது தேர்தல் பிரசாரம் முதல் அதிபராகிய இப்போது வரை அமெரிக்க அதிபர் டிரம்பின் முக்கிய முழக்கமாக இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் த... மேலும் பார்க்க

Indonesia: ``எனக்கு இந்திய DNA இருக்கிறது; இந்திய இசையைக் கேட்டால் நடனம் வரும்" - இந்தோனேசிய அதிபர்

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோவுக்கு ஞாயிற்றுக்கிழமை, குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்தார். இந்த விருந்தில், துண... மேலும் பார்க்க

Maha kumbh mela: ``மகா கும்பமேளா அனைத்து மதத்துக்குமானது..'' -யோகி ஆதித்யநாத் கூறுவதென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா பிப்ரவரி 26 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரப்பி... மேலும் பார்க்க

``முன்னோடி, வழிகாட்டி... நாட்டின் முக்கிய மருத்துவர் கே.எம்.செரியன்'' -பிரதமர், முதல்வர் இரங்கல்..

50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் கே.எம் செரியன். இவர் இந்தியாவின் முதல் இதய மாற்று சிகிச்சை உள்ளிட்ட பல சாதனைகளை செய்து உலகை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தவர்... மேலும் பார்க்க

``சட்டமன்றத் தேர்தலில் எனக்கு ஆதரவு தாருங்கள்'' - அரிட்டாபட்டியில் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின்

டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்ததை தொடர்ந்து, மேலூர் மக்களின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார்.அரிட்டாபட்டி மக்கள்அரிட்டாபட்டி: `பல்லுயிர் பெருக்க தல... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: ``எங்களுக்கு பெரியார் மண் இல்லை... பெரியாரே மண்தான்!'' -சீமான் காட்டம்

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”குடியரசு தின ஆளுநர் உர... மேலும் பார்க்க