செய்திகள் :

Indonesia: ``எனக்கு இந்திய DNA இருக்கிறது; இந்திய இசையைக் கேட்டால் நடனம் வரும்" - இந்தோனேசிய அதிபர்

post image

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோவுக்கு ஞாயிற்றுக்கிழமை, குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்தார். இந்த விருந்தில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அப்போது நகைச்சுவையாகப் பேச்சைத் தொடங்கிய இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, ``சில வாரங்களுக்கு முன்பு எனக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், எனக்கு இந்திய டி.என்.ஏ இருப்பது தெரியவந்தது. நான் இந்திய இசையைக் கேட்கும்போதெல்லாம் நடனமாடத் தொடங்குகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும்தானே..." எனப் பேசினார்.

இந்தோனேசிய அதிபருடன் குடியரசுத் தலைவர் - பிரதமர்

அப்போது சபையில் இருந்த அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பேசிய அவர், ``நான் இந்தியாவில் இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் ஒரு தொழில்முறை அரசியல்வாதியோ, ராஜ தந்திரியோ அல்ல. என் மனதில் உள்ளதைச் சொல்கிறேன். நான் வந்த இந்த சில நாள்களில் பிரதமர் மோடியின் தலைமைத்துவம், அர்ப்பணிப்புகளிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். வறுமையை ஒழிப்பதற்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும், சமூகத்தின் பலவீனமான பகுதியினருக்கு உதவுவதற்கும் அவர் அளித்த அர்ப்பணிப்பு உத்வேகமளிக்கிறது.

இந்தியாவும் இந்தோனேசியாவும் நீண்ட, பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளன. நமக்கு மத்தியில் நாகரிக தொடர்புகள் இருக்கிறது. இப்போதும் கூட நமது மொழியின் மிக முக்கியமான பகுதி சமஸ்கிருதத்திலிருந்து வருகிறது. இந்தோனேசியாவின் பல பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதை கவனிக்க முடியும். நமது அன்றாட வாழ்க்கையில், பண்டைய இந்திய நாகரிகத்தின் செல்வாக்கு வலுவானது. உண்மையில் இதுதான் நமது மரபியலின் ஒரு பகுதி என்று நினைக்கிறேன்." என்றார்.

Health: சாப்பிட்டப் பிறகு செய்யக்கூடாத விஷயங்கள்..!

ஒருவர் நலமாக இருப்பதற்கு உணவு, உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள் என ஆயிரம் காரணங்கள் கூறினாலும், அனைத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது நம்முடைய உணவுப் பழக்கம்தான். சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? ... மேலும் பார்க்க

US: ``கைகளில் விலங்கு; தண்ணீர், கழிவறைக்கு தடை" -கதறிய மக்கள்; டிரம்ப் செயலால் கொதிக்கும் பிரேசில்

'அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவேன்' - இது தேர்தல் பிரசாரம் முதல் அதிபராகிய இப்போது வரை அமெரிக்க அதிபர் டிரம்பின் முக்கிய முழக்கமாக இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் த... மேலும் பார்க்க

Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா?

Doctor Vikatan:எனக்கு வயது 40. பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அதற்காக மூன்று மாதங்கள் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டேன். அதன் பிறகு சுகர் டெஸ்ட் செய்தபோது எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் என்ற... மேலும் பார்க்க

Maha kumbh mela: ``மகா கும்பமேளா அனைத்து மதத்துக்குமானது..'' -யோகி ஆதித்யநாத் கூறுவதென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா பிப்ரவரி 26 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரப்பி... மேலும் பார்க்க

``முன்னோடி, வழிகாட்டி... நாட்டின் முக்கிய மருத்துவர் கே.எம்.செரியன்'' -பிரதமர், முதல்வர் இரங்கல்..

50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் கே.எம் செரியன். இவர் இந்தியாவின் முதல் இதய மாற்று சிகிச்சை உள்ளிட்ட பல சாதனைகளை செய்து உலகை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தவர்... மேலும் பார்க்க

``சட்டமன்றத் தேர்தலில் எனக்கு ஆதரவு தாருங்கள்'' - அரிட்டாபட்டியில் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின்

டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்ததை தொடர்ந்து, மேலூர் மக்களின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார்.அரிட்டாபட்டி மக்கள்அரிட்டாபட்டி: `பல்லுயிர் பெருக்க தல... மேலும் பார்க்க