செய்திகள் :

``சட்டமன்றத் தேர்தலில் எனக்கு ஆதரவு தாருங்கள்'' - அரிட்டாபட்டியில் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின்

post image

டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்ததை தொடர்ந்து, மேலூர் மக்களின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார்.

அரிட்டாபட்டி மக்கள்

அரிட்டாப்பட்டி,  அ.வெள்ள்ளாளப்பட்டியில் ஊர் பிரமுகர்களால் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், முதலில் அரிட்டாப்பட்டி மந்தை திடலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். உள்ளூர் மக்கள் குறைவாகவே கலந்துகொண்டார்கள். அதனால், வெளியூரிலிருந்து மக்களை அழைத்து வந்து முதல்வர் வருகின்ற சாலை வழியில் நிறுத்தியிருந்தனர்.

மாலையில் அரிட்டாபட்டி வந்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "திடீரென்று நான் இங்கு வந்ததற்கு காரணம், நேற்று இப்பகுதி மக்கள் வந்து என்னை அழைத்தார்கள். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது, அதற்கு எப்படிப்பட்ட அழுத்தத்தை மக்கள் தந்தார்கள் என தெரியும், அதனை உணர்ந்து உங்களில் ஒருவனாக இருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில், எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் பேசி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அது வெற்றி பெற்றுள்ளது, அதிமுக, பாமக,கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீர்மானத்தை நிறைவேற்றி கொடுத்தார்கள்.

மக்களால் ஆட்சியில் இருக்கும் நான், முதல்வர் பொறுப்பில் இருக்கும் வரை டங்ஸ்டன் வராது என்றேன், ஒரு வேளை டங்ஸ்டன் திட்டம் வந்தால் பதவியில் இருக்க மாட்டேன் என்றேன், எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என பெரியவர்கள் அழைத்தார்கள். உண்மையில் நன்றி உங்களுக்குத் தான் சொல்ல வேண்டும், நான் பிரித்து பேசவில்லை, வெற்றி நமக்கு கிடைத்துள்ளது, மீண்டும் ஒருமுறை உங்களை சந்திக்க வருவேன்.

அரிட்டாபட்டி

உங்களுடைய அன்பான முகத்தை, எழுச்சியான முகத்தை,சிரித்த முகத்தோடு பார்க்கின்றபோது உங்களோடு நீண்ட நேரம் பேசவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. ஆனால், மற்றொரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்குப்பிறகு விமானத்தைப் பிடித்து சென்னைக்கு செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. நாளைக்கு வேறொரு மாவட்டத்திற்கு செல்லவேண்டும். அதனால், நீண்ட நேரம் பேசமுடியாது. அதற்காக என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு, மீண்டும் ஒருமுறை உங்களையெல்லாம் சந்திக்க வருவோம்.

இன்னும் ஒன்றரை ஆண்டில் தேர்தல் வரவுள்ளது. அந்த தேர்தலில் என்ன முடிவு எடுப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்கள் வீட்டுப் பிள்ளை எனக்கு ஆதரவு தாருங்கள். எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன்" என்றவர், டங்ஸ்டன் திட்ட ரத்து அறிவிப்பை கொண்டாடும் வைகயில் அவ்வூரைச் சேர்ந்த தம்பதியின் குழந்தைக்கு வெற்றி என்று பெயர் சூட்டினார்.

அரிட்டாபட்டி வளர்ச்சிக்கு என்னென்ன தேவை என்கிற கோரிக்கை மனுவை ஊர் பிரமுகர்கள் தயார் செய்து முதல்வரிடம் கொடுக்க வைத்திருந்த நிலையில், அதை கொடுக்க விடாமல் காவல்துறையினரும், அதிகாரிகளும் தடுத்துவிட்டதாக மக்கள் புகார் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

US: ``கைகளில் விலங்கு; தண்ணீர், கழிவறைக்கு தடை" -கதறிய மக்கள்; டிரம்ப் செயலால் கொதிக்கும் பிரேசில்

'அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவேன்' - இது தேர்தல் பிரசாரம் முதல் அதிபராகிய இப்போது வரை அமெரிக்க அதிபர் டிரம்பின் முக்கிய முழக்கமாக இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் த... மேலும் பார்க்க

Indonesia: ``எனக்கு இந்திய DNA இருக்கிறது; இந்திய இசையைக் கேட்டால் நடனம் வரும்" - இந்தோனேசிய அதிபர்

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோவுக்கு ஞாயிற்றுக்கிழமை, குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்தார். இந்த விருந்தில், துண... மேலும் பார்க்க

Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா?

Doctor Vikatan:எனக்கு வயது 40. பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அதற்காக மூன்று மாதங்கள் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டேன். அதன் பிறகு சுகர் டெஸ்ட் செய்தபோது எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் என்ற... மேலும் பார்க்க

Maha kumbh mela: ``மகா கும்பமேளா அனைத்து மதத்துக்குமானது..'' -யோகி ஆதித்யநாத் கூறுவதென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா பிப்ரவரி 26 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரப்பி... மேலும் பார்க்க

``முன்னோடி, வழிகாட்டி... நாட்டின் முக்கிய மருத்துவர் கே.எம்.செரியன்'' -பிரதமர், முதல்வர் இரங்கல்..

50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் கே.எம் செரியன். இவர் இந்தியாவின் முதல் இதய மாற்று சிகிச்சை உள்ளிட்ட பல சாதனைகளை செய்து உலகை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தவர்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: ``எங்களுக்கு பெரியார் மண் இல்லை... பெரியாரே மண்தான்!'' -சீமான் காட்டம்

புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”குடியரசு தின ஆளுநர் உர... மேலும் பார்க்க