உலக அமைதிக்காகப் பாடுபடுவோம்: டொனால்ட் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரைய...
``முன்னோடி, வழிகாட்டி... நாட்டின் முக்கிய மருத்துவர் கே.எம்.செரியன்'' -பிரதமர், முதல்வர் இரங்கல்..
50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் கே.எம் செரியன். இவர் இந்தியாவின் முதல் இதய மாற்று சிகிச்சை உள்ளிட்ட பல சாதனைகளை செய்து உலகை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தவர்.
இவர் நேற்று முன்தினம் தனது 82-வது வயதில் காலமானார். இதையொட்டி பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இவருக்கு இரங்கலை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "ஃபிரண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் உலக புகழ் பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம் செரியனின் மறைவு செய்தி கேட்டு வருந்துகிறேன்.
இதய நலனில் அவருடைய முன்னோடி பணிகள் எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி இருக்கிறது. அது மருத்துவத்துறையில் இருக்கும் பலருக்கும் இன்ஸ்பிரேசனாக உள்ளது.
அவருடைய குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மருத்துவத்துறை மேலும் சிறப்பை அடைய அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு இன்ஸ்பிரேசனாக அமையும்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "நாட்டின் முக்கிய மருத்துவர்களின் ஒருவரான கே.எம் செரியனின் மறைவு செய்தியைக் கேட்டு வருந்துகிறேன். மருத்துவத்துறையில் அவருடைய பங்களிப்பு எப்போதும் நினைவுக்கூரத்தக்கதாக இருக்கும். அவர் பல உயிர்களை காப்பாற்றியதோடு மட்டுமில்லாமல், பல வருங்கால மருத்துவர்களுக்கு வழிகாட்டியுள்ளார். தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகியவற்றில் தனித்து விளங்கியவர். இந்தத் துயரத் தருணத்தில் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் என்னுடைய எண்ணம் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.