செய்திகள் :

ஜோலார்பேட்டை ரயில்வே பாலம்: ``பல ஆண்டுகளாக புகார் அளித்தும் எதுவும் மாறவில்லை'' - குமுறும் மக்கள்

post image

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னக்கம்மியம்பட்டு அருகே அமைந்துள்ளது இரயில்வே பாலம். நாட்றம்பள்ளி மற்றும் வாணியம்பாடியிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், அப்பகுதி மக்கள் என அனைவரும் இந்த வழியைப் பயன்படுத்தி வருகின்றனர். இங்குப் பல வருடங்களாகவே பொதுமக்கள் ‌அவ்வழியைக் கடக்க பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

ரயில்வே பாலம் - திருப்பத்தூர்

இது குறித்து சின்னக்கம்மியம்பட்டு கிராம மக்களிடம் விசாரித்த போது, "இந்த வழியில் எப்போதும் தண்ணீர் நின்று கொண்டே இருக்கும். மழைக்காலங்களில் இடுப்பு அளவு தண்ணீர் தேங்கி நிற்கும். எங்கள் ஊருக்கு செல்வதற்க்கு வேறு வழி இல்லை. வெறும் நான்கே வழிகள் தான் ஏரிக்கொடி, ரெட்டியூர், புதூர், மற்றும் இந்த இரயில்வே பாலம். இந்த ஒவ்வொரு வழிக்கும் கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு கி.மீ. இடைவெளி இருக்கும்.

இந்த‌ சூழல் இருப்பதால் பெரும்பாலான நேரங்களில் சுத்திக் கொண்டு தான் எங்கள் ஊருக்கு வருகிறோம். ஆனால் நாங்கள் பெரும்பாலும் உபயோகப்படுத்துவது ரெட்டியூர் மற்றும் இந்த இரயில்வே வழி‌ தான், காரணம் உணவகங்கள், காய்கறிக் கடைகள், அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகள், மருத்துவமனை போன்றவை அமைந்துள்ளன. மேலும், வெளியூருக்குச் செல்வதற்கும் இந்த வழியே பயணம் மேற்கொள்கிறோம்.

ரயில்வே பாலம் - திருப்பத்தூர்

பிரச்னையே தண்ணீர் தேங்குவது தான். அது அப்படியே தேங்காமல் சென்றால், பாதிப்பு இருக்காது. பாதை மிகவும் பள்ளமாகவும், குண்டும் குழியுடனும் இருக்கிறது. போதாதற்கு ஏரியிலிருந்து தண்ணீர் உடைந்து இந்த பாதையில் சேர்கிறது. கிணறுகள் நிரம்பி வழிந்தாலும் இந்த பாதையில் தான் தேங்கி நிற்கும். இதனால் எங்கள் பிள்ளைகளை ஸ்கூலுக்கு நேரத்திற்கு விட முடியாமல், நான்கு கி.மீ. சுத்திக் கொண்டு தான் பள்ளிக்குச் சென்றடைகிறோம்.

ஆத்திர அவசரத்துக்கு மருத்துவமனைக்குக் கூட செல்ல முடியவில்லை. மீறி வேகமாகச் சென்றால் வண்டியின் சைலென்சர்க்குள் தண்ணீர் புகுந்து, எங்களுக்குப் பெரிய செலவை ஏற்படுத்தி விடுகிறது. நாங்களும் பல ஆண்டுகளாக அதிகாரிகளிட இது தொடர்பாகப் பல முறை கூறியுள்ளோம். அவர்களும் நடவடிக்கை எடுக்கிறோம்‌ என்கிறார்கள். ஆனால் இதுவரை எதுவும் மாறவில்லை. ஒரு வருடங்களுக்கு முன்பாக வந்துப் பார்த்தார்கள். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எதற்கு வந்தார்கள் என்றே தெரியவில்லை. அப்படியே சென்று விட்டார்கள். இந்த வழியில் பயணிப்பதற்கு எதாவது ஏற்பாடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றனர்.

ரயில்வே பாலம் - திருப்பத்தூர்

இது குறித்து ஒரு வாகன ஓட்டி கூறுகையில், "நான் தினமும் இந்த வழியே வேலைக்குச் செல்வேன். தண்ணீர் அதிக அளவு இருந்தாலே மிகவும் சிரமம் தான். வேறு வழியில் சென்றால் பெட்ரோலுக்கு அதிக பணம் செலவாகிறது. சில முறை வண்டியை நேக்காக ஓரமாக ஓட்டிக்கொண்டு சென்று விடுவேன். ஒரு முறை டயர்‌ வழுக்கி கீழே விழுந்துவிட்டேன். ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருப்பதால் என்னைத் தூக்கவும் யாரும் வரல," என்று‌ வேதனையுடன் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாகத் திருப்பத்தூர் தாலுகாவில் வேலை செய்யும் பணியாளர்களிடம் விளக்கம் கேட்டபோது, "இது போன்ற இடங்களை பார்வையிட்டுத் தான் வருகிறோம். இதற்கு விரைந்து எதாவது மாற்று ஏற்பாடு செய்கிறோம்," என்றனர்.

அங்கீகரிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட `சாம்சங் தொழிற்சங்கம்' - வரவேற்று மகிழும் தொழிலாளர்கள்!

‘தொழிற்சங்கம் அமைக்க சட்டப்பூர்வ அங்கீகாரம், 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 35 நாள்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை, ஶ்ரீபெரும்புதூர் ‘சாம்சங்இந்தியா எலெக்ட்... மேலும் பார்க்க

Global Hyperloop Competition: ஆசியாவில் முதன்முறையாக சென்னையில் ஹைப்பர்லூப் போட்டி; எங்கு? எப்போது?

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம்(ஐஐடி மெட்ராஸ்), ஆசியாவிலேயே முதன்முறையாகச் சர்வதேச ஹைப்பர்லூப் போட்டியைப் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்துகிறது.ஐஐடிசென்னை, ஐஐடிஎம் பிரவர்... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு: `பாதிக்கப்பட்ட மாணவியைக் குற்றம்சாட்டுவதா?' - உச்ச நீதிமன்றம் காட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர் (FIR) இணையத்தில்... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: அபாயகர மருத்துவக் கழிவுகள்; துர்நாற்றம் வீசும் இறைச்சிக் கழிவுகள் - பாழாகும் பாலாறு!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாலாற்றில் கடந்த சில மாதங்களாக மருத்துவக் கழிவுகள், பிராய்லர் கழிவுகள், குப்பைகள் கொட்டி பாலாறு பாழாகி துர்நாற்றம் வீசி சுகாதார சீ... மேலும் பார்க்க

சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா... காவலர்களின் சாகச நிகழ்ச்சிகள் | Photo Album

சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா (Madras High Court)சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா (Madras High Court)சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா (Madras High Court)சென்னை உயர்... மேலும் பார்க்க

`பெரியார் தமிழகத்தின் கலங்கரை விளக்கம்; தற்குறிகள்தான் அவரை விமர்சிப்பார்கள்' - துரை வைகோ காட்டம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து மதிமுக-வின் முதன்மைச் செயலாளரும், எம்.பி-யுமான துரை வைகோ பிரசாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் பேசுகையில... மேலும் பார்க்க