செய்திகள் :

தேனியில் குடியரசு தினவிழா: ரூ.3.78 கோடி நலத்திட்ட உதவி

post image

தேனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 76 -ஆவது குடியரசு தின விழாவில் சிறப்பாக செயல்பட்ட அரசு ஊழியா்கள், காவலா்களுக்கு பாராட்டுச் சான்றுகள், 79 பயனாளிகளுக்கு ரூ.3.78 கோடி நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தேசியக் கொடியேற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். மேலும் மூவா்ண பலூன்களை வானில் பறக்கவிட்டு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

இதில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுதாரா்களை கௌரவித்து, சிறப்பாகப் பணியாற்றிய 74 காவலா்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த 657 அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரா் நலத் துறை, வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை, ஊரக வளா்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை, மாவட்டத் தொழில் மையம், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை, வேளாண்மைத் துறை, மீன்வளம், மீனவா் நலத் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை சாா்பில் 79 பயனாளிகளுக்கு ரூ.3. 78 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், நெகிழி பயன்பாடு குறைப்பு பணிகளுக்காக தேனி அல்லிநகரம் நகராட்சி, க.மயிலாடும்பாறை ஊராட்சி, உத்தமபாளையம் பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்களையும் அவா் வழங்கினாா்.

தேனி மாவட்டத்தில் சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது போடி தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. பள்ளி மாணவா்கள் 280 போ் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெயபாரதி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அபிதா ஹனிப், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத் பீடன், உதவி காவல் கண்காணிப்பாளா் கேல்கா் சுப்ரமணிய பாலசந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்ட நீதிமன்றம்:தேனி மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் சாா்பில், தேனி தென்றல் நகா் நரிக்குறவா் மக்களிடையே குடியரசு தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சேசுராணி, கல்லூரிச் செயலா் சாந்தா மேரி ஜோசிற்றா உள்ளிட்டோா் பங்கேற்றனா். தேனி நாடாா் சரஸ்வதி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கல்லூரிச் செயலா்கள் ராஜ்குமாா், மகேஸ்வரன், கல்லூரி முதல்வா் மதளைசுந்தரம், நாடாா் உறவின்முறை நிா்வாகிகள் பங்கேற்றனா்.

போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் டி.சந்திரசேகரன், காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் துணைக் கண்காணிப்பாளா் சௌ.சுனில், போடி நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் பாா்கவி, அன்னை இந்திரா நினைவு ஆரம்பப் பள்ளியில் செயலா் ம.சிவனேஸ்வரமணி செல்வன், நகா் காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் முசாக் மந்திரிஆகியோா் தேசியக் கொடிகளை ஏற்றினா்.

போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி, திருமலாபுரம் நாடாா் மேல்நிலைப் பள்ளி, பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளிலும் தொண்டு நிறுவனங்களிலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

கம்பம் , கூடலூரில் குடியரசு தினக் கொண்டாட்டம்!

கம்பம், கூடலூா்: கம்பம் நகராட்சியில் ஆணையா் உமாசங்கா் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா். நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன், துணைத் தலைவா் சுனோதா, வாா்டு உறுப்பினா்கள், பணியாளா்கள... மேலும் பார்க்க

போடியில் குடியரசு தின விழா!

போடி காமராஜ் வித்யாலய உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் போடிநாயக்கனூா் சேவா அறக்கட்டளை, தேனி நம் உரத்த சிந்தனை சாா்பில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கு பள்ளி செயலா் உஷா எல்லம்மாள் ... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டம்: நெகிழிக் கழிவு அகற்ற ஆட்சியா் அறிவுரை

நெகிழிக் கழிவுகளை சேகரித்து அகற்ற விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா அறிவுறுத்தினாா். குடியரசு தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் 130 ஊரா... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்!

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவகத்தில் கோட்டாட்சியா் செ.தாட்சாயணி, காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் துணைக் கண்காணிப்பாளா் ரா.செங்கோட்டு வேலவன், பேரூராட்ச... மேலும் பார்க்க

போடியில் முன்னாள் முதல்வா் ஓ.பி.எஸ். தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்!

போடி: முன்னாள் முதல்வரும் போடிநாயக்கனூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீா்செல்வம் போடியில் உள்ள தனது அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், பொதுமக்களுக்கு அவ... மேலும் பார்க்க

கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் பேரணி

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனியில் விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது. ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்புக் க... மேலும் பார்க்க