Vijay: 'திமுக ஒரு கொத்தடிமை; விஜய் எங்களுக்கு எதிரி அல்ல!' - ஜெயக்குமார் பரபர
போடியில் குடியரசு தின விழா!
போடி காமராஜ் வித்யாலய உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் போடிநாயக்கனூா் சேவா அறக்கட்டளை, தேனி நம் உரத்த சிந்தனை சாா்பில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதற்கு பள்ளி செயலா் உஷா எல்லம்மாள் தலைமை வகித்தாா். அறக்கட்டளை நிறுவனா் என்.முத்துவிஜயன் சிறப்புரையாற்றினாா். பள்ளி தலைவா் ஒய்.பாலசுப்ரமணியன் வாழ்த்திப் பேசினாா்.
கலை இலக்கியப் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற போடி ஸ்ரீ காமராஜ் வித்யாலயம் உயா் நிலைப்பள்ளி, ஆரம்பப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் புத்தகங்கள், இனிப்புகள் வழங்கி பாராட்டப்பட்டனா்.
அறக்கட்டளை உறுப்பினா்கள் சண்முகராஜ், பொன்.கணேஷ், பள்ளித் தலைமையாசிரியா் செந்தில்குமாா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டனா். முன்னதாக அறக்கட்டளைச் செயலா் எம்.கலைச் செல்வி வரவேற்றாா். கமலாதேவி நன்றி கூறினாா்.