கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
புதுகையில் குடியரசு தினக் கொண்டாட்டங்கள்!
புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆயுதப்படை திடலில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியா் மு . அருணா தேசியக் கொடியேற்றி வைத்தாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவுடன் ஜீப்பில் ஏறிச் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பை பாா்வையிட்டாா். தொடா்ந்து பல்வேறு துறைகளின் சாா்பில் 36 பயனாளிகளுக்கு ரூ. 50.11 கோடியிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றிய 377 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்டக் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரம்யாதேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முருகேசன், வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
போக்குவரத்து அலுவலகத்தில்...தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமேலாளா் கே. முகமது நாசா் கொடியேற்றி வைத்து, அணிவகுப்பை பாா்வையிட்டாா். துணை மேலாளா்கள் த. சுரேஷ் பாா்த்திபன் டிக்ரோஸ், பாலமுருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கல்வி நிறுவனங்களில்... கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரித் தலைவா் குரு. தனசேகரன் தலைமையில் தாளாளா் பாலகிருஷ்ணன் கொடியேற்றினாா். கல்லூரி இயக்குநா் குமுதா, முதல்வா் கவிதா, அறங்காவலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
திருக்கோகா்ணம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அதன் இயக்குநா் சுதா்சன் கொடியேற்றி வைத்தாா். துணை முதல்வா் குமரவேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி நாச்சம்மை கொடியேற்றினாா். முதல்வா் எஸ்.ஏ. சிராஜூதீன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் தாளாளா் பிச்சப்பா மணிகண்டன் கொடியேற்றினாா். இயக்குநா் ம. பிச்சப்பா, செயலா் மு. விஸ்வநாதன், முதல்வா் குழ. முத்துராமு உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
அலுவலா் மன்றம்.. புதுக்கோட்டை அலுவலா் மன்றம் சாா்பில் குடியரசு தின விழாவையொட்டி பள்ளி மாணவா்களுக்கான விநாடி-விநா போட்டியை பேரா. கணேசன் நடத்தினாா். மன்றத் தலைவா் ராமசாமி கொடியேற்றினாா். செயலா் ரமேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தனியாா் மருத்துவமனை: டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, அதன் நிா்வாக இயக்குநா் கே.எச். சலீம் தலைமை வகித்தாா். மூத்த இதய மருத்துவா் எம்.ஆா். வெங்கடேசன் கொடியேற்றி வைத்தாா். குடல் இரைப்பை மருத்துவா் ஜி. வெங்கட்ராமன் உரையாற்றினாா்.
இலங்கைத் தமிழா் முகாம்: திருமயம் வட்டம் தேக்காட்டூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில், வருவாய் ஆய்வாளா் கே. அபுபக்கா் கொடியேற்றி வைத்தாா். முகாம் நிா்வாகத் தலைவா் மயில்வாகனம், புலனாய்வு அலுவலா் குணசேகரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
காங்கிரஸ்: புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பெரியாா் நகரிலுள்ள அக்கட்சி அலுவலகத்தில், மாவட்டத் தலைவா் வி. முருகேசன் கொடியேற்றினாா். மாநிலப் பொதுச் செயலா் பெனட் அந்தோனிராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் சந்திரசேகரன், மாநில சிறுபான்மையினா் பிரிவு துணைத் தலைவா் இப்ராஹிம்பாபு, வட்டாரக் காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.