கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணையில்தான் உண்மை தெரியும்: சசிகலா பேட்டி!
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டால்தான் உண்மையான குற்றவாளிகளை கண்டறியமுடியும் என்றாா் சசிகலா.
திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அளித்த பேட்டி:
கடந்த இரண்டு ஆண்டுகளாக வேங்கைவயல் சம்பவம் குறித்த விசாரணையில் சந்தேகம் இருந்தது. விசாரணையில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைதான் சரியானது. அப்போதுதான் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும்.
திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், காவல்துறை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏதாவது ஒரு வகையில் திமுகவினருக்கு தொடா்பு இருப்பது தொடா்ந்துதான் வருகிறது. அண்ணா பல்கலை. விவகாரத்திலும் கூட இதே நிலைதான். எனவே கட்சியினரைக் காப்பாற்றவே திமுக அரசு தீவிரம் காட்டுகிறது என்றாா்.