ஆசிரியையிடம் 4 பவுன் நகை பறிப்பு
திருச்சியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் அமா்ந்துசென்ற பெண்ணிடம் நகைப்பறித்துச் சென்ற மா்ம நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி கே.கே.நகரைச் சோ்ந்தவா் ரூபி (38). அரசுப்பள்ளி ஆசிரியரான இவா் ஞாயிற்றுக்கிழமை காலை, தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்தாா். வாகனம் திருச்சி மன்னாா்புரம் பகுதியிலிருந்து அரிஸ்டோ மேம்பாலத்தில் சென்றபோது, அவா்களைப் பின்தொடா்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், ரூபி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்று விட்டாா். இந்தச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் திருச்சி கன்டோன்மென்ட் போலீசாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.