செய்திகள் :

``அலைப்பாயுதே படத்துக்கு என்னோட முதல் சாய்ஸ் ஷாருக்கான் -கஜோல் தான்'' -சீக்ரெட் பகிரும் மணிரத்னம்

post image

இயக்குநர் மணிரத்னத்தின் 'அலைபாயுதே' பிளாக்பஸ்டர் ஹிட் என்பதை தாண்டி, அது ஒரு 'எவர்கிரீன் ஹிட்' என்றே சொல்லலாம். இப்போது வரை அந்தப் படத்தின் புரோபோசல் சீன் முதல் பாட்டுகள் வரை டிரெண்டில் உள்ளது.

இந்தப் படம் குறித்த சீக்ரெட் ஒன்றை தற்போது கூறியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவர், "நான் அலைபாயுதே படத்தை ஷாருக்கான் மற்றும் கஜோல் வைத்து இயக்க முதலில் திட்டமிட்டு இருந்தேன். ஷாருக்கானும் இந்தக் கதைக்கு ஓகே சொல்லியிருந்தார். ஆனால், இந்தப் படத்தின் கடைசி எப்படி அமைய வேண்டும் என்பது அப்போது எனக்கு சரியாக தெரியவில்லை. அதனால், அலைபாயுதே படத்தை எடுக்காமல், 'தில் சே' படத்தை இயக்கினேன்.

ஷாருக்கான் -கஜோல்

தில் சே படத்திற்கு பிறகு தான், அலைபாயுதே கதையில் 'எது மிஸ் ஆகிறது' என்பதை முன்னர் நினைத்தேனோ, அதை கண்டுபிடித்தேன்" என்று கூறியிருக்கிறார்.

2000-ம் ஆண்டு, அலைபாயுதே மாதவன் - ஷாலினி நடிப்பில் வெளிவந்தது. இதே படம் ஹிந்தியில் 2002-ம் ஆண்டு 'சாத்தியா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் ஷாட் அலி இயக்கத்தில் விவேக் ஓபராய் - ராணி முகர்ஜி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Vishal: ``மிஷ்கினுக்கு இதே வேலையா போச்சு..." - காட்டமாகப் பேசிய விஷால்

இயக்குநர் மிஷ்கின், பட நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.இதனைத் தொடர்ந்து மிஷ்கின் அவர் பேசியதற்காக நேற்று (ஜனவரி 26) மன்னிப்புக் கோரியிருந்தார். இந்நிலையில் 'மிஷ்கினுக்கு இதே வேலையா... மேலும் பார்க்க

STR : `உன்ன ஷூட்டிங்ல கதறவிடுறது உறுதி அஸ்வத்' - `டிராகன்' படத்தின் பாடலை பாடியிருக்கும் சிம்பு

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டிராகன்' திரைப்படம் பிப்ரவரி மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருக்கிறார். `ஓ மை கடவுளே' படத்தின் மூலம் கவனம் ஈர... மேலும் பார்க்க

Ajithkumar:``அஜித் சார் கைகொடுத்துத் தூக்கிவிட்ட எத்தனையோ பேர்களில்...''- நெகிழும் மகிழ் திருமேனி

மோகன் லால் நடித்துள்ள `எல்2; எம்புரான்' படம் மார்ச் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.ப்ரித்விராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்திற்க... மேலும் பார்க்க

Vijay: `நான் ஆணையிட்டால்...' - விஜய் படங்களும் எம்.ஜி.ஆர் ரெபரன்ஸ்களும் ஒரு பார்வை

விஜய் சாட்டையை சுழற்ற 'ஜனநாயகன்' என்ற தலைப்போடு நான் ஆணையிட்டால் என்கிற வரிகளையும் சேர்த்து படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. அரசியல்வாதி அவதாரம் எடுத்த பிறகு விஜய் கமிட் ஆகி வெளியாகவிருக... மேலும் பார்க்க

``தவறை உடனடியா சரி செய்யற மிஷ்கினோட குணநலன் எல்லாருகிட்டயும் இருக்கணும்..'' - வெற்றிமாறன் பேச்சு

வெற்றிமாறன் உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கி உள்ள படம் 'பேட் கேர்ள்'. இந்தப் படத்தில் ஹிருது ஹாரூன், சாந்தி பிரியா, அஞ்சலி சிவராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வெற்றிமாறனின் தயாரிப்பு நிற... மேலும் பார்க்க

Thalapathy 69: விஜய்யின் கடைசி படம் `ஜனநாயகன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படும் அவரது 69-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது கே.வி.என் புரோடெக்சன் நிறுவனம். விஜய்யின் 69-வது படத்திற... மேலும் பார்க்க