பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...
உத்தரகாசியில் தீ விபத்தில் 10 வீடுகள் எரிந்து நாசம், ஒருவர் பலி
உத்தரகாசியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் எரிந்து நாசமாயின. ஒருவர் பலியானார்.
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சவானி கிராமத்தின் மோரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஒருவழியாக போராடி அவர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 8 முதல் 10 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
பின்னர், இந்த தீ விபத்தில் 25 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் சவானி கிராமத்தைச் சேர்ந்த பிரம்மா தேவி என்ற 75 வயது மூதாட்டி ஒருவரும் தீயில் கருகி பலியானார்.
தீவிபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!
மாவட்ட ஆட்சியர் மெஹர்பான் சிங் பிஷ்ட், மோரியின் வட்டாட்சியர், கூடுதல் வருவாய் பணியாளர்கள் உள்ளிட்டோர் நிவாரணப் பொருட்களுடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட சம்பவ இடத்திற்கு சென்றனர் என்றார்.
தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக திங்கள்கிழமை காலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், தற்காலிக தங்குமிடங்கள் உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.