சாத்தூர்: '7 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர்' - போக்சோவில் கைது
அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதியேற்போம்: விஜய்
குடியரசு நாளையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிய நிலையில், புது தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
இதையும் படிக்க: வெற்றி மாறன் தயாரித்த ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர்!
குடியரசு நாளை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், ”எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் விளைந்த சுதந்திர இந்தியாவில், அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்ட, தனி அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினமான இந்தக் குடியரசு தினத்தில், அதற்கு வித்திட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து, அனைவருக்குமான சம உரிமை மற்றும் சமூக உரிமைகள் கிடைத்திட, அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதியேற்போம்!
அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.