செய்திகள் :

தமிழக மீனவர்கள் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்

post image

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே வெள்ளிக்கிழமை(ஜன.25) இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (ஜன.26) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படும் மற்றொரு சம்பவத்தை மத்திய ன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்

அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள முதல்வர், வெள்ளிக்கிழமை (ஜன.25) ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை (தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 மீனவர்கள்) தனுஷ்கோடி அருகே அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்பது கவலை அளிக்கிறது.

இதையும் படிக்க |சொல்லப் போனால்... பட்ஜெட் சடங்கும் கோமிய மருந்தும்

இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே பதட்டத்தையும் அச்ச

உணர்வையும் ஏற்படுத்துவதோடு அவர்களது எதிர்காலத்தை நிச்சயமற்றதாகவும், இருண்டதாகவும் ஆக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே நமது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

எனவே, இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும் தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை!

வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில், ”கடந்த 2 நாள்களாக தென்கிழக்கு தீபக... மேலும் பார்க்க

பட்ஜெட்: ஜன. 29ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் வருகிற ஜன. 29 ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 2025-26 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கான அனைத்து வசதிகளும் நிறுத்தப்படும்: கேஜரிவால் குற்றச்சாட்டு

புதுதில்லி: தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆம் ஆத்மி அரசால் தொடங்கப்பட்ட மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும்,வசதிகளும் நிறுத்தப்படும் என்பதை பாஜக தலைவர்களின் வார்த்தைகள் மூலம், பல்வேறு வழிகளில் தெ... மேலும் பார்க்க

மக்கள் பணத்தை கோடீஸ்வர நண்பர்களுக்கு கடனாக வழங்குவது, தள்ளுபடி செய்வது இலவசம் இல்லையா?

புது தில்லி: பாஜக தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு மக்களின் பணத்தை கடனாக வழங்குவதும்,பின்னர் அந்தக் கடன்களை 2-3 ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்வது இலவசம் இல்லையா? என ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாள... மேலும் பார்க்க

பொருளாதாரத்தில் தமிழ்நாடு என்ன சாதித்தது?: இபிஎஸ் கேள்விக்கு டி.ஆா்.பி.ராஜா பதில்!

சென்னை: பொருளாதாரத்தில் தமிழ்நாடு என்ன சாதித்தது? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு கடந்த 3 ஆண்டுகளில் தொழில் துறை சாா்ந்த 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

குவைத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

குவைத் நாட்டில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க