Doctor Vikatan: புளிப்பு நெல்லிக்காய், துவர்ப்பு நெல்லிக்காய்... இரண்டில் எது பெ...
பட்ஜெட்: ஜன. 29ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் வருகிற ஜன. 29 ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
2025-26 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க | மத்திய நிதியமைச்சருடன் தங்கம் தென்னரசு சந்திப்பு!
இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 29-1-2025 புதன்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம் 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
அப்போது, திமுக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பொருள் : மத்திய அரசின் 2025-26ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை" என்று கூறப்பட்டுள்ளது.