செய்திகள் :

பொருளாதாரத்தில் தமிழ்நாடு என்ன சாதித்தது?: இபிஎஸ் கேள்விக்கு டி.ஆா்.பி.ராஜா பதில்!

post image

சென்னை: பொருளாதாரத்தில் தமிழ்நாடு என்ன சாதித்தது? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு கடந்த 3 ஆண்டுகளில் தொழில் துறை சாா்ந்த 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலளித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் நடத்திய உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் ஈா்த்த முதலீடு எவ்வளவு எனக் கோரி வெள்ளை அறிக்கை கேட்ட முதல்வா் மு.க. ஸ்டாலின், கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில், உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை நடத்தியும், நான்கு முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டும் ஈா்த்த முதலீடுகள் எவ்வளவு என்பது குறித்தும், டாவோஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பெறப்பட்ட முதலீட்டு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு என்பது குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கு விதமாக கடந்த 3 ஆண்டுகளில் தொழில் துறை சாா்ந்த 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பட்டியலிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்த சர்வதேச அரங்கில் புகழ்பெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தனி முத்திரையைப் பதித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் முந்தைய அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் எவரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமைந்ததிலிருந்து கடந்த மூன்றாண்டுகளாக அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சரும், துறை சார்ந்த அதிகாரிகள்-வல்லுநர் குழுவும் தொடர்ந்து பங்கேற்று, மாநிலத்தின் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் என்பது முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போடுவதற்கான அரங்கமல்ல. இதை அண்டை மாநிலமான ஆந்திரப்பிரதேச முதல்வர் தெளிவாக-விரிவாக, பொருளாதார அறிவாற்றல் உள்ள அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தெரிவித்திருக்கிறார். உலகளாவிய தொழில் வளர்ச்சி எந்தத் திசையில் பயணிக்கிறது, அதற்ககேற்ப உலகில் உள்ள நாடுகள் தமது தொழிற்கொள்கைகளை எப்படி வகுத்துள்ளன, அடுத்தடுத்த ஆண்டுகளில் எந்தெந்த துறையில் முதலீடுகள் பெருகும் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ளவும், பரிமாறக்கொள்ளவுமான உலக நாடுகளின் சந்திப்பு மையம்தான் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றம்.

கடந்த மே 2021 முதல் மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முன்னெடுத்த தொழிற்கொள்கையாலும், முதலீட்டாளர் சந்திப்புகள், உலக முதலீட்டாளர் மாநாடு ஆகியவற்றாலும் பன்னாட்டு-உள்நாட்டு நிறுவனங்களுடன் 893 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதன் விளைவாக 10,07,974 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்ப்பதற்கான வாய்ப்புகளும் 19,17,917 நேரடி வேலைவாய்ப்புகளுடன் 31,53,862 மொத்த வேலைவாய்ப்புகள் உருவாவதற்கான சூழலை அமைத்து, தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட முறையில் பல தொழிற்சாலைகள் உருவாகி, வேலைவாய்ப்பை வழங்கி, உற்பத்தியைத் தொடங்கியிருப்பது குறித்த விவரங்களை டாவோஸில் சந்தித்த உலக நாடுகளின் நிறுவனங்களிடம் விளக்கி, அவர்களைத் தமிழ்நாட்டில் தொழில்தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 50-க்கும் மேற்பட்ட சந்திப்புகள் நடந்துள்ளன.

டிட்கோ நிறுவனம் மூலமாக உருவாக்கப்படும் தமிழ்நாடு அறிவுசார் நகரம் குறித்து அறிந்த பன்னாட்டு முன்னணி பல்கலைக்கழகங்கள் நம்முடன் இணைந்து ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புத் துறைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுகின்றன. செயற்கை நுண்ணறிவு, பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த இருதரப்பு கலந்துரையாடல்களின் வழியே மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி, தயாரிப்புகளில் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு முதல்லரின் தலைமையிலான தமிழ்நாடு, மிகச்சிறந்த மையமாகத் திகழ்வதை உலக நாடுகளிடம் உறுதி செய்துளோம்.

கால்பந்து போட்டிகளில் உலகப் புகழ் பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் அமைப்புடன் நடந்த பேச்சு வார்த்தையின் பொழுது துணை முதல்வர் விளையாட்டுத் துறையில் ஏற்படுத்தி உள்ள முன்னேற்றத்தை எடுத்துச் சொன்னோம். அதனை ஆர்வமாக கேட்ட மான்செஸ்டர் நிறுவனத்தினர் தமிழ்நாட்டில் கால்பந்து போட்டிகளை ஊக்கப்படுத்தவும்ம் குறிப்பாக பெண்கள் அணியை வலுப்படுத்தவும் விரைவில் சென்னையில் துணை முதல்வர் சந்திக்க இருப்பதாக தெரிவித்தனர்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... பட்ஜெட் சடங்கும் கோமிய மருந்தும்

இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 43 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள் என்பது உலக அரங்கில் வியப்புடன் கவனிக்கப்படுகிறது.

இந்த துறை சார்ந்த வல்லுநர்களுடன் நடந்த கலந்துரையாடலின்போது தமிழ்நாட்டில் கடந்த நூறாண்டுகளாக திராவிட இயக்கம் முன்னெடுத்த பாலின சமத்துவம், கல்வி வாய்ப்பு, பெண்களுக்கான இடஒதுக்கீடு, அவர்களை அதிகாரமயப்படுத்துதல், திராவிட மாடல் அரசின் விடியல் பயணத் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், தோழி விடுதி, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்படும் உயர்தர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்க முடிந்தது.

இந்த அமர்வில் முன்வைக்கப்பட்ட கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, ஜப்பான் நாட்டில் இதற்காகவே ஒரு தனிக் கூட்டம் நடத்துவதற்கும் அதில், தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்து உலக நாடுகள் பங்கேற்கும் கலந்துரையாடலுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருப்பதை அறிந்து கொள்ளாமல் ‘டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் 2025-ஆம் ஆண்டுக்கான கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

பொருளாதாரத்தில் தமிழ்நாடு என்ன சாதித்தது? என்பதை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கையை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 1960-61 இல் 8.7 சதவிகிதமாக இருந்தது. அது 2023-2024 இல் 8.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தனி நபர் வருவாயைப் பொறுத்தவரை, தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் சராசரி 2023- 2024-ல் 171.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்களும் 2023-24 இல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 30 சதவிகித பங்கினை கொண்டிருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்வரின் ஆட்சித்திறனால் தமிழ்நாட்டின் புகழ்க்கொடி உலக அரங்கில் உயர்ந்து பறக்கிறது.

உலக நாடுகள் வியக்கும் வகையில் தமிழ்நாட்டின் தொழிற்கட்டமைப்பும், பெண்களின் பங்களிப்பும் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் கவனம் ஈா்த்துள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மேலும் மாநிலத்தின் மீது எவ்வித அக்கறையுமில்லாமல் வெறும் அவதூறுகளை அரைவேக்காட்டுத்தனமாக எங்கேயோ ‘கிண்டி’த் தருவதை ஆளுநரும் எதிர்க்கட்சித் தலைவரும் மென்று கொண்டிருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை!

வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில், ”கடந்த 2 நாள்களாக தென்கிழக்கு தீபக... மேலும் பார்க்க

பட்ஜெட்: ஜன. 29ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் வருகிற ஜன. 29 ஆம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 2025-26 நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கான அனைத்து வசதிகளும் நிறுத்தப்படும்: கேஜரிவால் குற்றச்சாட்டு

புதுதில்லி: தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆம் ஆத்மி அரசால் தொடங்கப்பட்ட மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும்,வசதிகளும் நிறுத்தப்படும் என்பதை பாஜக தலைவர்களின் வார்த்தைகள் மூலம், பல்வேறு வழிகளில் தெ... மேலும் பார்க்க

மக்கள் பணத்தை கோடீஸ்வர நண்பர்களுக்கு கடனாக வழங்குவது, தள்ளுபடி செய்வது இலவசம் இல்லையா?

புது தில்லி: பாஜக தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு மக்களின் பணத்தை கடனாக வழங்குவதும்,பின்னர் அந்தக் கடன்களை 2-3 ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்வது இலவசம் இல்லையா? என ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாள... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெ... மேலும் பார்க்க

குவைத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

குவைத் நாட்டில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க