தை அமாவாசை: சேலம் கோட்டம் மூலம் இன்று 35 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
World Record: 320 சதுர அடி கேப்ஸுல்; 120 நாள்கள் நீருக்கடியில் வாழ்ந்து உலக சாதனை படைத்த நபர்!
அனைத்து வசதிகளும் கொண்ட இந்த புவி மீது வாழ்வதற்கே நாம் பல சிரமங்களை மேற்கொள்கிறோம். ஆனால் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் 120 நாள்கள் நீருக்குள் வாழ்ந்து உலக சாதனை படைத்துள்ளார்.
59 வயதான ருடிகர் கோச், ஒரு ஜெர்மன் விண்வெளி பொறியாளர். அவர் பனாமா கடற்கரையில் நீரில் மூழ்கிய காப்ஸூலில் 120 நாள்கள் தண்ணீருக்குள் வாழ்ந்து உலக சாதனை படைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இச்சாதனையை முடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு 100 நாள்கள் ஃப்ளோரிடா குளத்தில் உயிர் வாழ்ந்து சாதனை படைத்த அமெரிக்கரான ஜோசப் டிடுரியின் சாதனையை முறியடித்துள்ளார் .
இது குறித்துப் பேசுகையில், ``இப்பயணம் ஒரு பெரிய சாகசமாக இருந்தது. ஆனால், அது முடிந்து விட்டது என்பது வருத்தமாக உள்ளது. நான் அங்கு வாழ்ந்த காலத்தை மிகவும் ரசித்தேன். நீருக்குள் விஷயங்கள் அமைதியாகி, இருட்டாகி, கடல் ஒளிரும் போது அது அழகாக இருக்கிறது. அதனை நீங்களே அனுபவிக்க வேண்டும்... விவரிக்க முடியாது" என்றார்.
நீருக்குள் தனி அறையில் அவர் தன்னுடைய நாள்களைக் கழித்திருந்தாலும், நிலத்தில் நவீன வசதிகளுடன் இருப்பது போன்றே... அவர் அங்கு இருந்திருக்கிறார். அவர் தங்கியிருந்த கேப்ஸுலில் படுக்கை, கழிப்பறை, டி.வி, கணினி, இணையம், உடற்பயிற்சி உபகரணம் உள்ளிட்டவை இருந்தன. அதேபோல உள்ளே இவரின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைக் கண்காணிக்க, மேற்பரப்பில் பார்வையாளர்கள் மற்றும் மருத்துவர் குழு ஈடுபடுத்தப்பட்டிருந்தது. நான்கு கேமராக்கள் மூலம் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன.