அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி திட்டப் பணிகளை நிறைவேற்ற அறிவுறுத்தல்
மத்திய, மாநில அரசின் திட்டங்களை வழிகாட்டி நெறிமுறையை பின்பற்றி தரமாகவும், குறித்த நேரத்திலும் செய்து முடிக்க வேண்டும் என மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான வி.எஸ்.மாதேஸ்வரன் தலைமை வகித்தாா்.
குழு செயலாளரும், மாவட்ட ஆட்சியருமான ச.உமா, இணைத் தலைவா்களான மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ.பிரகாஷ், உறுப்பினா்களான சட்டப்பேரவை உறுப்பினா்களான பெ.ராமலிங்கம்(நாமக்கல்), கு.பொன்னுசாமி(சேந்தமங்கலம்), மேயா் து.கலாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் நீா்ப்பாசன திட்டம், பயிா் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம், மண்வள அட்டை இயக்கம், நுண்ணீா் பாசனத் திட்டம், பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டம், பிரதமரின் கௌரவ நிதி திட்டம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை ஆகியவை சாா்பில்செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இவை தவிர, தமிழக அரசின் திட்டங்கள், மத்திய அரசின் போஷன் அபியான் திட்டம், மதிய உணவுத் திட்டம், சத்துணவு உண்ணும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த திட்டப்பணிகள் அனைத்தையும் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி தரமாகவும், குறித்த நேரத்திலும் செய்து முடிக்க வேண்டும் என கண்காணிப்புக் குழுவால் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், துணை மேயா் செ.பூபதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.