இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா...
13-வது மாடியிலிருந்து தவறி விழுந்த 2 மாதக் குழந்தை; கண நேரத்தில் காப்பாற்றிய `ஹீரோ' இளைஞர்!
பொதுவாக முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தாலே கை, கால் ஒடிந்துவிடும். ஆனால் மும்பை அருகில் 13வது மாடியில் விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறது. மும்பை டோம்பிவலி தேவிசாபாடா என்ற இடத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் வசிக்கும் 2 வயது குழந்தை ஒன்று 13வது மாடியில் உள்ள வீட்டு பால்கனியில் நின்று விளையாடிக்கொண்டிருந்தது. திடீரென அக்குழந்தை பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்தது. குழந்தை தரையை நோக்கி கீழே வந்து கொண்டிருப்பதை அந்த வழியாக வந்து கொண்டிருந்த பாவேஷ் மாத்ரே என்ற வாலிபர் பார்த்தார். அவர் சற்றும் தாமதிக்காமல் குழந்தையை காப்பாற்றுவதற்காக ஓடினார். அவர் தனது கையை நீட்டி குழந்தை விழுவதை பிடித்தார். குழந்தை வேகமாக விழுந்ததால் அவரால் கையில் முழுமையாக பிடிக்கமுடியவில்லை.
ஆனால் மேலிருந்து வந்த வேகம் குறைந்ததால் குழந்தை கீழே விழுந்ததில் லேசான காயத்துடன் உயிர் தப்பித்துக்கொண்டது. உடனே மாத்ரேயை அப்பகுதியில் உள்ளவர்கள் வெகுவாக பாராட்டினர். மாத்ரே இல்லாமல் இருந்தால் குழந்தை நிச்சயம் உயிர் தப்பி இருக்க வாய்ப்பு இல்லை என்றும், அவரை கெளரவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து மாத்ரே கூறுகையில், ``நான் கட்டடத்தை வேகமாக நடந்து சென்றபோது குழந்தை ஒன்று மேலிருந்து கீழ் நோக்கி வருவதைப் பார்த்தேன். உடனே சிறிதும் தாமதிக்காமல் குழந்தையை காப்பாற்ற ஓடினேன். மனிதநேயத்தை விட மதம் ஒன்றும் பெரிதில்லை" என்று தெரிவித்தார்.