இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா...
ஹிந்தி கற்க கட்டாயப்படுத்த முடியாது, ஆனால்...: ஆர்எஸ்எஸ் இணைச் செயலர்
ஹிந்தி கற்க யாரையும் கட்டாயப்படுத்த முடியாது, ஆனால் மூன்று மொழிகளைக் கற்றுக் கொள்வது அவசியம் என்று ஆர்எஸ்எஸ் இணைச் செயலர் சி.ஆர். முகுந்தா தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை காலை தொடங்கியது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆர்எஸ்எஸ் இணைச் செயலர் சி.ஆர். முகுந்தா, வளர்ந்த இந்தியாவுக்கான மதிப்பீடுகள் குறித்து உரையாற்றினார்.
இதையும் படிக்க : பிற நாடுகளின் நாடாளுமன்றத்தில் மோடி செலவிட்ட நேரமே அதிகம்: சசி தரூர்
அவர் பேசியதாவது:
“ஒவ்வொரு சமூகமும் தனித்தனி அமைப்பை உள்ளடக்கியது. இந்த அமைப்பில் உள்ள அனைவரும் ஆர்.எஸ்.எஸை சேர்ந்தவர்கள் என்று நினைக்கவில்லை.
ஆர்.எஸ்.எஸ். கொள்கையை ஒத்த பார்வைகளைக் கொண்டவர்கள் அரசாங்கத்தில் உள்ளனர். ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களை பொதுக்கல்வியில் கொண்டுவர அவர்கள் முயற்சிக்கின்றனர்.
கலாசாரமும் அதன் மதிப்பீடுகளும் கல்வி வழியாகவே புகுத்தப்பட்டதாக நாங்கள் கருதுகிறோம். இது பள்ளிக் கல்வியில் மட்டுமல்ல, குடும்பம், சமூகத்திலிருந்தும் செய்யப்பட்டன.
இந்தியாவுக்கான தனித்துவமான கண்ணோட்டத்தை ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. அரசியல், நீதித்துறை, தொழில்துறைகளில் இது இல்லை என்று நாங்கள் உணர்கிறோம்.
நான் ஆங்கிலம் அல்லது ஹிந்திக்கு எதிரானவன் அல்ல. ஆனால், ஹிந்தியை ஒரு பிரசாரமாக எதிர்ப்பது நாட்டுக்கு நல்லதல்ல. யாரையும் ஹிந்தி கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்த முடியாது, ஆனால், நீங்கள் மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவர் தாய்மொழியைக் கற்றுக்கொள்வதில் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். எங்கள் உறுப்பினர்களை குறைந்தது இரண்டு மொழிகளைக் கற்றுக்கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். இப்போது அனைவரும் மூன்று மொழிகளைக் கற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தாய் மொழி, பிராந்திய மொழி மற்றும் ஒரு தொழில் மொழி” என்றார்.