செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்துார்: தங்க நகை திருட்டு; உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி விற்பனை... 3 பேர் கைது!

post image

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் துடியாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் பாண்டியராஜ்- கமலா (வயது 48) தம்பதியினர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். பாண்டியராஜ் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். மகள் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில், மகளின் படிப்புக்காக, கமலா ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு திண்டுக்கல்லில் வாடகைவீட்டில் வசித்து வருகிறார். அவ்வபோது ஊருக்கு வந்து தேவையான வேலைகளை முடித்துவிட்டு திரும்பவும் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு செல்வதை கமலா வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கைது

அதன்படி கடந்த 16.8.2024 தேதியன்று மாலை 5 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது, லாக்கர்‌ சாவியை தவிர்த்து வீட்டுச் சாவி உள்பட மற்றவைகளை பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்துவிட்டு கமலா திண்டுக்கல் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 13ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு திரும்பி வந்த கமலா, பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்து வைத்திருந்த சாவியை பெற்று வீட்டை திறந்து உள்ளே போய் பார்த்துள்ளார். அப்போது பீரோவில் உள்ள லாக்கர் கதவு நெம்பி உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து லாக்கரில் இருந்தவற்றை சோதனை செய்து பார்த்தபோது அதில் இருந்த சுமார் 15.5 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

கைது

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் யாரோ திட்டமிட்டு நகை திருட்டில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீஸின் விசாரணையில், துடியாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதி மணிகண்டன் (வயது 22) என்பவர் சமீபத்தில் 1.20 லட்சம் மதிப்புள்ள புதிய பைக் வாங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் ஜோதி மணிகண்டனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர், கமலா வீட்டில் நகை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

கைது

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் திருடிய நகையை மம்சாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் விற்றுக் கொடுத்ததும், நகைகளை உருக்கி அதை தங்கக்கட்டிகளாக மாற்றிக்கொடுத்தது அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஜோதி மணிகண்டன், ரஞ்சித்குமார் மற்றும் கோபிநாத் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15.5 பவுன் தங்க நகை பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் குறிப்பாக ஜோதி, மணிகண்டன் மீது தென்காசி, சங்கரன்கோவில், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூட்டையில் தங்கம், பணம்: மங்களூருவில் கொள்ளை; நெல்லையில் பதுக்கல் - கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு அருகேயுள்ள உல்லால் பகுதியில் செயல்பட்டு வரும் கோட்டேகார் கூட்டுறவு வங்கியில் கடந்த 7-ம் தேதி முகமுடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் ஊழியர்கள்... மேலும் பார்க்க

`கோயிலில் அம்மன் சிலையை உடைத்த மர்ம நபர்கள்' - போலீஸ் குவிப்பு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரம் ஊர் உள்ளது. இந்த ஊரில், புராண இதிகாசங்களோடு தொடர்புடைய நூற்றாண்டு பழைமைவாய்ந்த நல்லதங்காள் அம்மன் கோயில் உள்ளது.இந்தநிலையில், கோயிலில் உள்ள அம்... மேலும் பார்க்க

குடியரசு தினத்தில் அதிர்ச்சி கொடுத்த இலங்கை... 3 படகுகளுடன் 33 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று 439 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் சிலர் தனுஷ்கோடி - மன்னார் இடையிலான பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் மீன்பிடித்... மேலும் பார்க்க

தென்காசி உள்பட 4 மாவட்டங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்‌ கைது!

தென்காசி உள்பட 4 மாவட்டங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தென்காசி மாவட்ட தனிப்படை போலீஸ் கைது செய்தது. இதுகுறித்து, போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "கடந்த சில வாரங்களுக்... மேலும் பார்க்க

வேங்கை வயல் வழக்கு: 2-வது நாளாக மக்கள் போராட்டம்; கிராமத்தை சுற்றி சோதனைச்சாவடி, போலீஸார் குவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் ந... மேலும் பார்க்க

சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை வழக்கு: மெத்தனமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்..!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர்அலி (58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக... மேலும் பார்க்க