செய்திகள் :

சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை வழக்கு: மெத்தனமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்..!

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர்அலி (58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் கனிமக் கொள்ளைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

ஜகபர் அலி

குறிப்பாக, திருமயம் அருகே உள்ள துலையானூரில், அதன் அருகே உள்ள வலையன்வயலைச் சேர்ந்த ராசு மற்றும் ராமையா ஆகியவர்கள் நடத்தி வரும் ஆர்.ஆர் குரூப்ஸ் என்ற பெயரிலான கிரஷர் மற்றும் கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து புகார் மனு அளித்து வந்தார். இந்நிலையில் தான், ஜகபர் அலி கடந்த 17-ம் தேதி அன்று தொழுகை முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது குவாரி உரிமையாளர்களின் சதித்திட்டத்தால் 407 மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, இது தொடர்பாக திருமயம் காவல்துறையினர் உயிரிழந்த ஜகபர் அலியின் மனைவி மரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொலை வழக்குப் பதிவு செய்து இதில் தொடர்புடைய குவாரி உரிமையாளர் ராசு அவரது மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், விபத்தை ஏற்படுத்தி கொலை செய்வதற்காக அழைத்துவரப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் காசிநாதன் ஆகிய நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அந்த வாகனம்

அவர்களை வருகின்ற பிப்ரவரி 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல் பெற்று புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர். அதோடு, இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள குவாரி உரிமையாளர்களில் ஒருவரான ராமையா சில தினங்களுக்கு முன்பு நமணசமுத்திரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதற்கிடையில், சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட குழுவினரான கரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கனிமவளத்துறை உதவி இயக்குனர்கள் இரண்டு பேர் மற்றும் புவியியலாளர் இரண்டு பேர் என இரண்டு குழுவினர் ஜகபர் அலி புகார் தெரிவித்திருந்த குவாரி உரிமையாளர்கள் ராசு மற்றும் ராமையாவுக்கு சொந்தமான துலையானூரில் உள்ள ஆர்.ஆர் குருப்ஸூக்கு சொந்தமான கல்குவாரிகளில் ட்ரோன் உதவியுடன் கடந்த இரண்டு நாள்கள் அளவிடும் பணியை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்து பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தே.மு.தி.க உள்ளிட்டக் கட்சிகள் இந்த சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

குணசேகரன்

‘இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைப்பெற்று, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்று தர வேண்டும்’ என்ற கோரிக்கையும் பல்வேறு தரப்பில் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி போலீஸார் வசம் மாற்றி நேற்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கனிம வள கொள்ளைக்கு எதிராக அளித்த புகாரின் பேரில் கொலை செய்யப்பட்ட ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக, திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, திருச்சி சரக ஐ.ஜி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் : அண்ணனை வெட்டி கொன்ற தம்பி - கொலையில் முடிந்த திருமணம் மீறிய உறவு

விருதுநகர் மாவட்டத்தில், பெண் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை வெட்டிக்கொலை செய்த தம்பியை ராஜபாளையத்தில் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "... மேலும் பார்க்க

``புகாரை கசியவிட்டதால்'' - போரட்டம் அறிவித்த நாளில் படுகொலை... பரவும் வீடியோவும் பகீர் பின்னணியும்!

கனிமவள கொள்ளைக்கு எதிராக..புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர்அலி (வயது: 58). இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ... மேலும் பார்க்க

சாத்தூர்: '7 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர்' - போக்சோவில் கைது

வழிபாடு நடத்துவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை சாத்தூர் மகளிர் போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சாத்தூர் தாலுகாவுக்குட்பட்ட... மேலும் பார்க்க

மூட்டையில் தங்கம், பணம்: மங்களூருவில் கொள்ளை; நெல்லையில் பதுக்கல் - கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு அருகேயுள்ள உல்லால் பகுதியில் செயல்பட்டு வரும் கோட்டேகார் கூட்டுறவு வங்கியில் கடந்த 7-ம் தேதி முகமுடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் ஊழியர்கள்... மேலும் பார்க்க

`கோயிலில் அம்மன் சிலையை உடைத்த மர்ம நபர்கள்' - போலீஸ் குவிப்பு

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரம் ஊர் உள்ளது. இந்த ஊரில், புராண இதிகாசங்களோடு தொடர்புடைய நூற்றாண்டு பழைமைவாய்ந்த நல்லதங்காள் அம்மன் கோயில் உள்ளது.இந்தநிலையில், கோயிலில் உள்ள அம்... மேலும் பார்க்க

குடியரசு தினத்தில் அதிர்ச்சி கொடுத்த இலங்கை... 3 படகுகளுடன் 33 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று 439 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இவர்களில் சிலர் தனுஷ்கோடி - மன்னார் இடையிலான பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் மீன்பிடித்... மேலும் பார்க்க