வாரத்தின் முதல் நாளில் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!
பங்குச் சந்தை கடந்த வாரம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் வணிக நாளான இன்றும் சரிவுடனே தொடங்கியுள்ளது.
இன்று காலை 10.45 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 680 புள்ளிகள் சரிந்து 75,510.85 புள்ளிகளில் வணிகம் நடைபெற்று வருகின்றது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 234 புள்ளிகள் சரிந்து 22,858.30 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை 76,190.46 புள்ளிகள் சரிந்திருந்த சென்செக்ஸ், மேலும் 490 புள்ளிகள் சரிந்து 75,700.43 புள்ளிகளாக இன்று வணிகம் தொடங்கியது.
கடந்த வெள்ளிக்கிழமை 23,092.20 புள்ளிகளில் முடிந்த தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, இன்று சற்றே புள்ளிகள் உயர்ந்து 23,183.903 புள்ளிகளுடன் தொடங்கியது.
இன்றைய வணிகத்தில் பிரிட்டானியா, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல ஹீரோ மோட்டார், மாருதி, ஆசியன் பெயிண்ட், ஐடிசி, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, சன் பார்மா, இன்போசிஸ் போன்ற பங்குகளின் விலை சரிந்து வருகின்றன.