செய்திகள் :

செபி அமைப்பின் புதிய தலைவர் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியத்தின் (செபி) தலைவராக உள்ள மாதவி புரி புச் பதவிக்காலம் நிறைவடையவிருக்கும் நிலையில் புதிய தலைவர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய நிதித்துறை அறிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு செபி தலைவராக பதவியேற்ற மாதவி புரி புச் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான நிலையில், அவரது மூன்று ஆண்டுகள் பதவிக் காலம் பிப். 28-ல் நிறைவடைகிறது.

இதையடுத்து, இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்கு முறை வாரியத்தலைவர் பதவிக்கு தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து பூர்த்திசெய்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செபி தலைவராக பதவியேற்பவரின் பதவிக் காலம் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் அல்லது அவர் 65 வயதை நிறைவு செய்வது என இதில் எது முதலில் வருமோ அதுவரை பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செபி தலைவராக நியமிக்கப்படுபவர், மத்திய அரசின் செயலர் பதவியில் இருப்பவர்களுக்கு இணையான ஊதியம் அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட மாத ஊதியமாக ரூ.5,62,500 மட்டும், வீடு, வாகனம் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் வழங்கப்படுவது என ஒன்றை தெரிவு செய்துகொள்ளலாம் என பொருளாதார விவகாரத் துறை வெளியிட்டிருக்கும் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பங்குச் சந்தைகளை ஒழுங்குமுறைபடுத்தும் அமைப்பாக செயல்பட்டு வரும் செபி அமைப்பு, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது. தற்போது தலைவராக இருக்கும் மாதவி புரி புச் மற்றும் அவரது கணவர் மீது ஏராளமான முறைகேட்டுப் புகார்கள் எழுந்தன.

மாதவி புரி புச், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் செபி அமைப்பின் முழு நேர உறுப்பினராக இருந்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் செபி தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது பதவி பிப். 28ஆம் தேதி நிறைவடையவிருப்பதால், 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் லாபம் 22 சதவிகிதம் சரிவு!

புதுதில்லி: பேட்டரி உற்பத்தியாளரான எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த 3 வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 22 சதவிகிதம் சரிந்து ரூ.158 கோடியாக உள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண... மேலும் பார்க்க

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம் 20% அதிகரிப்பு!

புதுதில்லி: விற்பனை அதிகரித்ததன் காரணமாக, டிசம்பர் மாத காலாண்டில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 20 சதவிகிதம் உயர்ந்து ரூ.609.35 கோடியாக உள்ளது.கடந்த நிதியாண்டு இதே காலாண்டில், ... மேலும் பார்க்க

பெல் நிறுவனத்தின் லாபம் இரு மடங்காக அதிகரிப்பு!

புதுதில்லி: பொதுத்துறை நிறுவனமான, 'பெல்' நிறுவனத்தின் நிகர லாபம், 2024 - 25 ஆம் நிதியாண்டு, இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.134.70 கோடி ஆக உள்ளது. டிசம்பர் 31, 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின்... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.86.56-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டண அச்சுறுத்தல்கள் தணிந்ததால், இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 25 காசுகள் சரிந்து ரூ.86.56 ஆக முடிந்தது.தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற... மேலும் பார்க்க

மீண்டெழுந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அறிவித்த நிலையில் வங்கி, ஆட்டோ மற்றும் ரியாலிட்டி பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் கொள்முதல் செய்ததன் காரணமாக இன்று ஈக்விட்டி பெஞ்ச... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை இன்று(ஜன. 28) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 75,659.00 என்ற புள்ளிகளில் தொடங்கியது. பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றமடைந்து வரும் நில... மேலும் பார்க்க