Muttukadu Boat Ride: SEANZ CRUISE | சென்னைக்குள் ஒரு கோவா 1400 ரூபாயில் சொகுசுக்...
மீண்டெழுந்த சென்செக்ஸ், நிஃப்டி!
மும்பை: ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அறிவித்த நிலையில் வங்கி, ஆட்டோ மற்றும் ரியாலிட்டி பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் கொள்முதல் செய்ததன் காரணமாக இன்று ஈக்விட்டி பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை உயர்ந்து வர்த்தகமானது.
பங்குகள் விற்கப்படுவதையடுத்து அடுத்து, வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை சுமார் 1.5 டிரில்லியன் ரூபாய் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், மீட்சிக்கு தயாராக உள்ள இந்திய பங்குச் சந்தை.
கலவையான உலகளாவிய குறிப்புகள் இருந்தபோதிலும், இந்திய குறியீடுகளான நிஃப்டி இன்று 22,960.45 புள்ளிகளில் தொடங்கி பிறகு 23,137.95 என்ற உச்சம் தொட்டு பிறகு, 22,857.65 ஆக சரிந்து மீண்டும் 22,957.25 புள்ளிகளில் நிலைபெற்றது.
வர்த்தக முடிவில் நிஃப்டி 128.1 புள்ளிகள் உயர்ந்து 22,957.25-ஆக முடிந்தது. அதே வேளையில் சென்செக்ஸ் 535.24 புள்ளிகள் உயர்ந்து 75,901.41 புள்ளிகளில் நிலைபெற்றது.
நிஃப்டியில் ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தும் சன் பார்மா, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், ஈச்சர் மோட்டார்ஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.
துறை வாரியாக இன்று ஆட்டோமொபைல், வங்கி, ரியாலிட்டி குறியீடுகள் 1 முதல் 2 சதவிகிதமும், மூலதன பொருட்கள், மின்சாரம், உலோகம், எண்ணெய் & எரிவாயு, எஃப்எம்சிஜி, ஹெல்த்கேர் மற்றும் ஐடி துறை குறியீடுகள் 0.5 முதல் 1 சதவிகிதமும் வரை உயர்ந்து முடிந்தது.
பங்குச் சந்தைகளில் விற்பனை தொடர்ந்த நிலையிலும், வங்கி மற்றும் வாகனத் துறைகளின் தலைமையில் குறியீடு உயர்ந்தது. அதே வேளையில், மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் பெரும்பாலானைவ இன்று மீண்டெழுந்தது.
இன்றைய வர்த்தகத்தில் 2937 பங்குகள் வர்த்தகமான நிலையில், 940 பங்குகள் உயர்ந்தும், 1920 பங்குகள் சரிந்தும் 77 பங்குகள் மாற்றமில்லாமல் முடிந்தது.
ரியாலிட்டி துறையைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகள், பார்மா ஆகிய பங்குகளின் செயல்திறன் இன்று சிறந்த முடிந்த நிலையில் எனர்ஜி துறை பங்குகள் சரிந்தது முடிந்தது.
ஹாங்காங் மற்றும் ஆசிய சந்தைகளில் டோக்கியோ உயர்ந்து முடிந்தது. தென் கொரியா மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகள் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நேற்று அமெரிக்க பங்கு சந்தையான நாஸ்டாக் 3 சதவிகிதம் சரிந்ததையடுத்து ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகளும் சரிந்தி முடிந்தது.
இதையும் படிக்க: பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிகர லாபம் 25% அதிகரிப்பு!