செய்திகள் :

இந்திய ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.86.56 ஆக முடிவு!

post image

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 1 காசு உயர்ந்து ரூ.86.56 ரூபாயாக முடிவடைந்தது.

ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கூட்ட முடிவில் வட்டி விகிதக் குறைப்பு இருக்காது என்ற எதிர்பார்ப்பில் அமெரிக்க டாலர் சற்று உயர்ந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில், இந்தியா ரூபாய் பலவீனமான குறிப்பில் ரூ.86.58 ஆக தொடங்கி, பிறகு அதிகபட்சமாக ரூ.86.49 ஆகவும் குறைந்தபட்சமாக ரூ.86.61 ஆகவும், முடிவில் 1 காசு உயர்ந்து ரூ.86.59ஆக முடிந்தது.

இதையும் படிக்க: உறுதியான குறியீடுகளால் சென்செக்ஸ், நிஃப்டி கிட்டத்தட்ட 1% உயர்வுடன் முடிவு!

முன்பதிவு தொடக்க நாளில் 30,179 புக்கிங்கை பெற்ற மஹிந்திரா!

புதுதில்லி: மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 ஆகிய இரண்டு புதிய மின்சார மாடல்களுக்கு 30,179 முன்பதிவுகளை பெற்றது.நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, எக... மேலும் பார்க்க

2025-ல் இதுவரை ரூ. 1 லட்சம் கோடி வெளிநாட்டு நிதி வெளியேற்றம்!

2025-ஆம் ஆண்டில் இதுவரை இந்திய பங்குச் சந்தையில் இருந்து ரூ. 1 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பிப்ரவரில் கடந்த இரு வாரங்களில் மட்டும் ரூ. 21,272 கோடி வெளி... மேலும் பார்க்க

8 நகரங்களில் 26% சரிந்த வீடுகள் விற்பனை

கடந்த டிசம்பா் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 26 சதவீதம் சரிந்துள்ளது. இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ப்ராப்டைகா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

சம்வர்தன மதர்சன் நிகர லாபம் ரூ.879 கோடி!

புதுதில்லி: வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான, சம்வர்தன மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம், 2024 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 3-வது காலாண்டில், ரூ.879 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது என்று தெரிவித... மேலும் பார்க்க

மனக்சியா கோட்டட் மெட்டல்ஸ் 3வது காலாண்டு லாபம் 23% அதிகரிப்பு!

புதுதில்லி: மனக்சியா கோட்டட் மெட்டல்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், டிசம்பர் காலாண்டில், 23 சதவிகிதம் அதிகரித்து ரூ.5.07 கோடி ஆக உள்ளது.கடந்த 2023-24 நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலகட்டத்த... மேலும் பார்க்க

போர்போன் விஸ்கி மீதான சுங்க வரி 50% குறைப்பு!

புதுதில்லி: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தீவிரமடைந்துள்ளதால், போர்பன் விஸ்கி மீதான இறக்குமதி வரியை சுமார் 50 சதவிகிதமாக இந்தியா குறைத்துள்ளது.அமெரிக்க அதிபர் ... மேலும் பார்க்க