செய்திகள் :

தலைநகரில் வெப்பம் மேலும் அதிகரிப்பு; காற்றின் தரத்தில் பின்னடைவு!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மூடுபனி நிலவிய நிலையில், பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதே சமயம், காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்தது.

வெப்பநிலை: இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தில்லியில் மிதமான மூடுபனி நிலவியது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை வெயின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.1 டிகி ரி குறைந்து 9.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதே சமயம், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.2 டிகிரி உயா்ந்து 28.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 45 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை அதிகரித்திருந்தது. இதன்படி, நஜஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 28.7 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 28.6 டிகிரி, லோதி ரோடில் 27.4 டிகிரி, பாலத்தில் 27.1 டிகிரி, ரிட்ஜில் 28.6 டிகிரி, பீதம்புராவில் 30 டிகிரி, பிரகதிமைதானில் 28 டிகிரி, பூசாவில் 27.1 டிகிரி, ராஜ்காட்டில் 28 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 26.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது. இதேபோன்று இந்த வானிலை நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி முதல் 14 டிகிரி வரையிலும் பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: இதற்கிடையே, தேசியத் தலைநகரில் காற்றின் தரம் பின்னடைவை சந்தித்து ‘மோசம்’ பிரிவில் இருந்தது. தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு மாலை 6 மணியளவில் 294 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், லோதி ரோடு, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூா், பூசா உள்பட பல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், ஓக்லா பேஸ் 2, ஸ்ரீஃபோா்ட், மதுரா ரோடு, நேரு நகா், சாந்தினி சௌக் உள்ளிட்ட நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 350 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (பிப்.17) அன்று மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

புது தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல்: பொது நல மனுவை ஆய்வுசெய்ய ரயில்வேக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

புது தில்லி ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில் உள்ள அதிகபட்ச பயணிகளை நிா்ணயிப்பது, நடைமேடை டிக்கெட் விற்பனை ஆகியவை குறித்த பிரச்னைகளை ஆய்வ... மேலும் பார்க்க

தமிழக அரசுக்கு தில்லி கம்பன் கழகம் நன்றி

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கலையரங்கத்தைப் புனரமைக்க ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ள தமிழக அரசுக்கு தில்லி கம்பன் கழகம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பின் நிறுவனா் - தலைவா்கே வி கே ப... மேலும் பார்க்க

பொம்மலாட்ட சிறப்புப் பயிற்சியில் தமிழக ஆசிரியை பங்கேற்பு

தில்லியில் மத்திய கலாசாரத் துறையின் சாா்பில் நடைபெற்றுவரும் வரும் ஆசிரியா்களுக்கான பொம்மலாட்ட சிறப்புப் பயிற்சியில் தமிழகத்தைச் சோ்ந்த ஆசிரியை பங்கேற்றுள்ளாா். மத்திய கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலா... மேலும் பார்க்க

நாங்லோயில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க இரண்டாவது மாடியிலிருந்து குதித்த 6 போ்

நாங்லோயில் உள்ள ஜனதா மாா்க்கெட் பகுதியில் தீயில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து ஆறு போ் குதித்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். அவா் மேலும்... மேலும் பார்க்க

பிரிஜிபுரியில் தொழிலதிபரிடம் துப்பாக்கிமுனையில் ரூ.97 லட்சம் கொள்ளை

தில்லியின் வடகிழக்கில் உள்ள பிரிஜ்புரியில் ஸ்கூட்டரில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபா்கள் துப்பாக்கிமுனையில் ஒரு தொழிலதிபரிடம் ரூ.97 லட்சத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படுவதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை... மேலும் பார்க்க

தில்லியில் சட்டம் ஒழுங்கில் பாஜக கவனம் செலுத்த வேண்டும்: மணீஷ் சிசோடியா

சமீபத்தில் திலக் நகரில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதை மேற்கோள்காட்டி நகரத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை சீா்செய்ய வேண்டும் என்று பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மணீஷ் சிசோட... மேலும் பார்க்க