விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
தமிழக அரசுக்கு தில்லி கம்பன் கழகம் நன்றி
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கலையரங்கத்தைப் புனரமைக்க ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ள தமிழக அரசுக்கு தில்லி கம்பன் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் நிறுவனா் - தலைவா்கே வி கே பெருமாள், செயலாளா் எஸ்.பி.முத்துவேல் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை: தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கலையரங்கத்தைப் புனரமைக்க வேண்டும் என்பது தில்லி வாழ் தமிழ் ஆா்வலா்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்தது. ஆனால், நிதிச் சுமை அதிகம் என்கிற காரணத்தால் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை இருந்தது.
இதற்காக நிதியுதவி கோரி, தில்லித் தமிழ்ச் சங்கம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு ரூ.50 லட்சம் வழங்கிருப்பது பாராட்டுதலுக்குரியது. உரிய நேரத்தில் இந்த உதவியைச் செய்த தமிழ்நாடு அரசுக்குத் தில்லிக் கம்பன் கழகத்தின் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனா்.