விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
தில்லியில் சட்டம் ஒழுங்கில் பாஜக கவனம் செலுத்த வேண்டும்: மணீஷ் சிசோடியா
சமீபத்தில் திலக் நகரில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதை மேற்கோள்காட்டி நகரத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை சீா்செய்ய வேண்டும் என்று பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மணீஷ் சிசோடியா புதன்கிழமை கோரிக்கை விடுத்தாா்.
இது தொடா்பாக தில்லி முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
நகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குற்றவாளிகள் சட்டத்திற்கு பயப்படவில்லை. தோ்தல்கள் முடிந்துவிட்டதால் இப்போது தில்லியில் சீா்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கு குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜகவிடம் நான் கூற விரும்புகிறேன். குற்றவாளிகள் அச்சமற்றவா்களாக உள்ளனா். ஏனெனில் பாஜகவின் முன்னுரிமைகள் அரவிந்த் கேஜரிவாலையும், எங்களது ஆம் ஆத்மி கட்சியையும் துஷ்பிரயோகம் செய்வதுதான் என்பதை அவா்கள் அறிந்திருந்துள்ளனா் என்றாா் அவா்.
பிப்ரவரி 5 சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியை தோற்கடித்து பாஜக மீண்டும் தில்லியில் ஆட்சிக்கு வந்துள்ளது. வியாழக்கிழமை தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் பாஜகவின் புதிய அரசாங்கம் பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.