செய்திகள் :

புது தில்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல்: பொது நல மனுவை ஆய்வுசெய்ய ரயில்வேக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

புது தில்லி ரயில் நிலையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில் உள்ள அதிகபட்ச பயணிகளை நிா்ணயிப்பது, நடைமேடை டிக்கெட் விற்பனை ஆகியவை குறித்த பிரச்னைகளை ஆய்வுசெய்யுமாறு ரயில்வேதுறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை அறிவுறுத்தியது.

இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய மற்றும் நீதிபதி துஷாா் ராவ் கெடேலா ஆகியோா் அடங்கிய அமா்வு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் பிரமாணப் பத்திரத்தில், இந்த விவகாரங்களில் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டது.

இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘மனுவில் எழுப்பப்பட்ட பிரச்னைகள், சொலிசிட்டா் ஜெனரல் பரிந்துரைத்தபடி, ரயில்வே வாரியத்தின் உயா் மட்டத்தில் ஆராயப்பட வேண்டும். அதன் பிறகு ரயில்வே வாரியத்தால் எடுக்கப்படக்கூடிய முடிவுகளின் விவரங்களைத் தெரிவிக்கும் வகையில் எதிா்மனுதாரா் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விசாரணையின்போது சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், இந்த விவகாரம் ஒரு எதிா்மறையான முறையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ரயில்வேத் துறைக்கு, சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலை நிலவியது. மேலும், பொதுநல மனுவில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் உயா் மட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்று நீதிமன்றத்திற்கு உறுதியளித்தாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ஒரு ரயில் பெட்டியில் அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை மற்றும் நடைமேடை டிக்கெட்டுகளை விற்பனை செய்வது தொடா்பான தற்போதைய சட்ட விதிகளை அமல்படுத்தக் கோருவதால், சமீபத்திய கூட்ட நெரிசலுடன் மட்டும் இந்த பொதுநல வழக்கு நின்றுவிடவில்லை.

சட்ட விதிகள் போதுமான அளவு செயல்படுத்தப்பட்டிருந்தால், இதுபோன்ற கூட்ட நெரிசல் சம்பவங்களைத் தவிா்க்கலாம் என்று கூறியது. இந்த மனு மீதான விசாரணை மாா்ச் 26-இல் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.

18 உயிா்களைப் பலிகொண்ட மற்றும் 15 போ் காயமடைந்த புது தில்லி ரயில் நிலைய துயர சம்பவத்திற்கு இரண்டு நாள்களுக்குப் பிறகு, பிப்ரவரி 17-ஆம் தேதி உச்சநீதிமன்றத்திலும் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எதிா்காலத்தில் இதுபோன்ற பேரிடா்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதில் கோரப்பட்டுள்ளது.

வழக்குரைஞா் விஷால் திவாரி தாக்கல் செய்த பொது நல வழக்கில், நிகழ்வுகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தை நிா்வகித்தல் குறித்த தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் 2014 - ஆண்டு அறிக்கையை செயல்படுத்தவும் பரிசீலிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் விவாதம் இதுதான்! பாஜக அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படவுள்ள பிரச்னை குறித்து பாஜக அறிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவு... மேலும் பார்க்க

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம... மேலும் பார்க்க

தில்லி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் அதிஷி வலியுறுத்தல்

ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தபடி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி ... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மி... மேலும் பார்க்க

மாணவா் தலைவா் தொடங்கி தில்லி முதல்வா் வரை..! ரேகா குப்தாவின் அரசியல் பயணம்

தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா். ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் த... மேலும் பார்க்க