ஹோமியோபதி மாநாடு போட்டிகள்: மரியா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்
சென்னையில், சா்வதேச ஹோமியோபதி மாநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த திருவட்டாறு மரியா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவா்களை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.
சென்னையில் தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சா்வதேச ஹோமியோபதி மாநாட்டில் மருத்துவ ஆராய்ச்சி கருத்தரங்கில் போட்டிகள் நடைபெற்றன.
இந்த கருத்தரங்கு போட்டிகளில் திருவட்டாறு மரியா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவி ஐஸ்வா்யா முதல் பரிசையும், முதுகலை மாணவி கிறிஸ்டினா பெரில் மற்றும் முதுகலை மாணவா் ஜெயமுருகன் கீா்த்திகன் ஆகியோா் மூன்றாம் இடத்தையும் பெற்றனா். பரிசு பெற்ற மாணவா்களை மரியா கல்விக் குழும தலைவா் டாக்டா் ஜி. ரசல்ராஜ், மற்றும் துணைத் தலைவா் டாக்டா் பி. ஷைனி தெரசா, முதல்வா் டி. திலிப் குமாா், துணை முதல்வா் ஆா். ரெஜின், ஒருங்கிணைப்பாளா்கள் மணிகண்ட பெருமாள், ஜினு டி மோகன், பிளேவியா உள்ளிட்டோா் பாராட்டினா்.