செல்வப்பெருந்தகைக்கு எதிராக இன்று கார்கே, ராகுலை சந்திக்கும் அதிருப்தி தலைவா்கள்...
இது டான் 2 அல்ல, டிராகன்..! நல்ல வரவேற்பால் நெகிழ்ச்சியடைந்த இயக்குநர்!
டிராகன் படத்துக்கு வரும் ஆதரவுக்கு நெகிழ்ச்சியடைந்துள்ளார் பேசியுள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் இன்று (பிப். 21) திரையரங்குகளில் வெளியானது.

டிரைலரைப் பார்த்து சமூக ஊடகங்களில் இது டான் 2 என கிண்டல் அடிக்கப்பட்டது. இது குறித்து இயக்குநர் பங்கேற்ற பல்வேறு நேர்காணல்களிலும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “படம் வரட்டும் தெரியும்” எனக் கூறியிருந்தார்.
இதையும் படிக்க:கெத்தாகக் கலக்குகிறாரா பிரதீப் ரங்கநாதன்? டிராகன் - திரை விமர்சனம்!
காலையில் பூம்பாறை முருகன் கோயிலில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து சாமி தரிசனம் செய்திருந்தார்.
தற்போது, படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சியடைந்து திரையரங்கு ஒன்றில், “இது டான் 2 அல்ல, டிராகன்” எனக் கூறி நடிகர் பிரதீப், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்களை நெகிழ்ச்சியாக கட்டிப் பிடிப்பார்.
இந்தப் புகைப்படங்கள், விடியோக்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.
ஓ மை கடவுளே இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவுக்கு இது 2ஆவது படம். அடுத்ததாக நடிகர் சிம்புவுடன் இணைந்து புதிய படத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
