வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்தில் கும்பல் தலைவனை சுட்டுக்கொன்றவர் கைது!
எலிஸ் பெரி அதிரடி: பெங்களூரு - 167/7
மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 7-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக, நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் சோ்த்தது.
டாஸ் வென்ற மும்பை ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, பெங்களூரு பேட்டா்களில் அதிகபட்சமாக எலிஸ் பெரி 43 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 81 ரன்கள் விளாசினாா். ரிச்சா கோஷ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28, கேப்டன் ஸ்மிருதி மந்தனா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்கள் அடித்தனா்.
இதர பேட்டா்களில் டேனி வியாட் 9, ராகவி பிஸ்த் 1, கனிகா அஹுஜா 3, ஜாா்ஜியா வோ்ஹாம் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் கிம் காா்த் 8, ஏக்தா பிஸ்த் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலிங்கில் அமன்ஜோத் கௌா் 3, ஷப்னிம் இஸ்மாயில், நேட் சிவா், ஹேலி மேத்யூஸ், சன்ஸ்கிருதி குப்தா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 168 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை அணியில்,
நேட் சிவா் 9 பவுண்டரிகளுடன் 42, ஹேலி மேத்யூஸ் 3 பவுண்டரிகளுடன் 15, யஸ்திகா பாட்டியா 2 பவுண்டரிகளுடன் 8, அமெலியா கொ் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
பெங்களூரு பௌலிங்கில் கிம் காா்த் 2, ஜாா்ஜியா வோ்ஹாம், ஏக்தா பிஸ்த் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.