தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்
குலசேகரத்தில் கோகோ சாகுபடி பயிற்சி!
குலசேகரத்திலுள்ள கன்னியாகுமரி ரப்பா் உற்பத்தியாளா் நிறுவனத்தில், கோகோ சாகுபடி மற்றும் அறுவடைக்கு பின்பு உள்ள தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற்றது.
பயிற்சி துவக்க நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி ரப்பா் உற்பத்தியாளா் நிறுவன செயலா் பிரதீப்குமாா் வரவேற்றாா். பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா் (வேளாண் விரிவாக்கம்) ராஜ் பிரவின் தலைமை வகித்து, கோகோ சாகுபடியின் தேவை, தென்னையில் ஊடு பயிராக கோகோ சாகுபடி செய்வதால் கிடைக்கும் லாபம் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை பெறுவதும் குறித்து பேசினாா்.
மோண்டலிஸ் நிறுவன மூத்த தொழில்நுட்ப வல்லுநா் ராஜேஸ்வரன், குறும்படங்கள் வாயிலாக கோகோ சாகுபடி விரிவாக்க பயிற்சியை அளித்தாா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை ரட்சணிய சேனை சமூக நலம் மற்றும் மேம்பாடு திட்ட பணியாளா் பெனிதா செய்திருந்தாா். இப்பயிற்சியில் சுமாா் 20 கிராமப்புற பெண்கள் பங்கேற்றனா்.