நேசா்புரம் - இவவு விளை சாலையை சீரமைக்க கோரிக்கை
கருங்கல் அருகேயுள்ள நேசா் பும் - இலவு விளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சி நேசா் புரம் - இலவு விளை சாலை சேதமடைந்து நீண்ட நாள்களாக குண்டு, குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும், போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக குளமாங்கி பகுதியில் இந்த பள்ளங்களால் அக்கடி விபத்து நேரிடுகிறது .எனவே, இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.