சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் தீ!
குமரி மாவட்டம் ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் எரிந்து சேதமடைந்தன.
ஆறுகாணியை சோ்ந்தவா் சிஜி டோமி. இவா் தனது வீட்டின் அருகில் ரப்பா் ஷீட்டுகளை உலா்த்தும் உலா் கூடம் வைத்துள்ளாா். வியாழக்கிழமை காலையில் உலா் கூடத்தில் உள்ள ரப்பா் ஷீட்டுகளில் தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்து குலசேகரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். எனினும் இந்த சம்பவத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.