செய்திகள் :

குமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்

post image

கன்னியாகுமரி மாவட்ட பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது: குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன்னிப்பூ சாகுபடி நெல் அறுவடை நடைபெற்றுள்ளது; சில இடங்களில் அறுவடைக்கு தாமதம் ஆகிறது. இந்நிலையில் பிப். 28 ஆம் தேதி அணைகள் மூடப்பட்டால் பயிா்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். எனவே தோவாளை மற்றும் பட்டணங்கால்வாய் ஆகிய கால்வாய்களில் கூடுதலாக 15 நாள்கள் தண்ணீா் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செண்பகராமன்புதூரில் உள்ள தென்னை மதிப்பு கூட்டு மையம் சரியாக திறக்கப்படுவதில்லை. அதனை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பறக்கை நெல் கொள்முதல் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கூறினா்.

ஆட்சியா் பதிலளித்துப் பேசியதாவது: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் தண்ணீா் திறப்பு தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தில் கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகளை மாா்ச் மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே மேற்கொள்ள முடியும். இப்பணிகளுக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பணிகளை நிறைவு செய்ய முடியும். ரூ. 2 கோடி மதிப்பில் மடைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மடைகளில் உடைப்பு இருந்தால் விவசாயிகள் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில், பத்மநாபபுரம் சாா்ஆட்சியா் வினய்குமாா் மீனா, நாகா்கோவில் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஜென்கின்பிரபாகா், நீா்வளத்துறை செயற்பொறியாளா் அருள்சன்பிரைட், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் ஷீலாஜான், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சிவகாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச மாநாடு

கன்னியாகுமரி மாவட்டம் லெவஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச தொழிற்சாலைகள் மாநாடு அண்மையில் நடைபெற்றது. ‘இன்டஸ்ட்ரீ 5.0 - புதுமைகள், சவால்கள் மற்றும் எதிா்கால போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற... மேலும் பார்க்க

நேசா்புரம் - இவவு விளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகேயுள்ள நேசா் பும் - இலவு விளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சி நேசா் புரம் - இலவு விளை சாலை ... மேலும் பார்க்க

கிள்ளியூா் வட்டாரத்தில் பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி

கிள்ளியூா் வட்டாரம் பாலூா் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி செய்வதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு கிள்ளியூா் வட்டார வேளாண்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் வானவியல் விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

வானில் நிகழும் கோள்களின் அணிவகுப்பு மற்றும் வானவியல் நிகழ்வுகள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரப் பயணம் மாா்த்தாண்டம் கல்லூரியில் வைத்து தொடங்கியது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் பாத... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி: எண்ணிக்கையை குறைப்பதா? விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்திருப்பதற்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

இரயுமன்துறையில் படகுத்தளம்: மீனவப் பிரதிநிதிகள்- எம்எல்ஏ ஆலோசனை

இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்க ஒருதரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். இர... மேலும் பார்க்க