செய்திகள் :

வார பலன்கள்: கே.சிஎ.ஸ் ஐயர் கணித்தது!

post image

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (பிப்ரவரி 21 - 27) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதாரம் உயரும். நேர்வழியில் சிந்தித்துச் செயலாற்றுவீர்கள். உடனிருப்போருக்கு உதவுவீர்கள். வீண்செலவுகள் ஏற்படாது.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பயிற்சிகளைச் சிறப்பாக மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை விற்பீர்கள். விவசாயிகள் உதவியாளர்களை மதித்து நடப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் பணிகளில் செயல்திறன் மேம்படும். கலைத் துறையினர் தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பெண்களுக்கு குடும்பத்தினரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். மாணவர்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 21, 22.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

தடைபட்டிருந்த செயல்களை முடிப்பீர்கள். தொழிலில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பயணம் செய்ய நேரிடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வருவாயை மேம்படுத்தும் எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரிகள் திட்டமிட்டவை நிறைவேறும். விவசாயிகள் புதிய ஊடுபயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கூடும். கலைத் துறையினர் புதிய பொருள்களை வாங்குவீர்கள். பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 23, 24.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

வருமானத்தில் உயர்வு உண்டாகும். வீட்டுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். குழந்தைகள் உங்களது அறிவுரைகளைக் கேட்பார்கள். உறவினர்கள் மதிப்பார்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரிகள் சாதகமான பலன்களைக் காண்பீர்கள். விவசாயிகள் விளைச்சலில் உயர்வைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டுவீர்கள். கலைத் துறையினரின் புகழ் உயரும். பெண்கள் பெற்றோரை அரவணைத்துச் செல்வீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 25, 26.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வீண் குழப்பங்கள் நீங்கும். சாதுர்யமான பேச்சால் கௌரவம் உயரும். திறமைக்கான பாராட்டுகள் குவியும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் இருப்பீர்கள். விவசாயிகளுக்கு வருவாய் கூடும்.

அரசியல்வாதிகள் கட்சிக் கட்டுப்பாட்டை மீற மாட்டீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் கணவர்வழி குடும்பத்தாருடன் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் பாடங்களை உடனுக்குடன் படிப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - பிப்ரவரி 27.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பொதுச்சேவையில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபாரிகள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் கொள்முதலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளை வெற்றியுடன் முடிப்பீர்கள். கலைத் துறையினர் சக கலைஞர்களிடம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலை மேம்படுத்துவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உடனிருப்போருக்கு வாய்ப்புகளை வழங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் உதவுவார்கள். வியாபாரிகள் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்துடன் இணக்கமாக இருப்பீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் -இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

அநாவசியப் பயணங்களைத் தவிர்த்திடுவீர்கள் பலவழிகளில் வருமானம் வரும். எதிர்ப்புகள் விலகிவிடும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். வியாபாரிகள் பழைய பொருள்களைக் குறைந்த விலைக்கு விற்பீர்கள். விவசாயிகள் ஊடுபயிர்களைப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் சமூகத்தில் புகழ் உயரும். கலைத் துறையினருக்கு உதவிகள் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினரிடம் இனிமையாகப் பேசுவீர்கள். மாணவர்கள் பிறரிடம் நட்புடன் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சூழ்நிலைகளுக்கேற்ப செயல்படுவீர்கள். கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். வருவாய் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நல்ல பெயரை எடுப்பீர்கள். வியாபாரிகள் நண்பர்களை அனுசரித்து நடப்பீர்கள். விவசாயிகள் கொள்முதலில் வருமானத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்கு உதவுவீர்கள். கலைத் துறையினர் கலைப்பயணங்களால் நன்மை அடைவீர்கள். பெண்கள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். மாணவர்கள் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தினரை அனுசரித்து நடப்பீர்கள். பதவிகள் கிடைக்கும். பயணங்களால் நன்மையை அடைவீர்கள். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்களது வேலைகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் பொருளாதாரத்தில் மேன்மையைக் காண்பீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம்- இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தனித்துச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். புதிய பொருள்களை உற்பத்தி செய்வீர்கள். உடனிருப்போர் உதவியாக இருப்பார்கள். கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்கள் அலைச்சல்களைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். வியாபாரிகள் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் கவனத்துடன் இருக்கவும். கலைத் துறையினர் பிறரிடம் நட்புடன் இருப்பீர்கள். பெண்கள் கணவருடன் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். மாணவர்கள் யோகா கற்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்ப ஒற்றுமையைப் பேணி காப்பீர்கள். வருமானம் சீராக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்பீர்கள். பேச்சில் நிதானம் தேவை.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் பிறரை அனுசரித்து நடப்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டுவீர்கள். கலைத் துறையினர் கடுமையாக உழைப்பீர்கள். பெண்களின் தனித்தன்மை வெளிப்படும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சிந்தித்துச் செயல்படுத்துவீர்கள். பெற்றோருக்கு ஆதரவாக இருப்பீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடன்கள் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற வருவாய் கிடைக்கும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்களைத் தக்க வைப்பீர்கள்.

அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரிடம் நட்பாகப் பழகுவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் பெரியோர்

சொல் கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.22-02-2025சனிக்கிழமைமேஷம்:இன்று மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்ட... மேலும் பார்க்க

அயா்லாந்தை தோற்கடித்தது இந்தியா

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஹெச்) புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா 3-1 கோல் கணக்கில் அயா்லாந்தை வெள்ளிக்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் அயா்லாந்துக்காக ஜெரிமி டன்கன் 8-ஆவது நிமிஷத்தி... மேலும் பார்க்க

எலிஸ் பெரி அதிரடி: பெங்களூரு - 167/7

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 7-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக, நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் சோ்த்தது. டாஸ் வென... மேலும் பார்க்க

விண்டேஜ் கார் பேரணி - புகைப்படங்கள்

இந்தியாவில் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் காட்சியைக் கொண்டாடும் வகையில், புதுதில்லி கர்தவ்யா பாதையில் நடைபெற்ற 21வது கன் சல்யூட் விண்டேஜ் கார் அருகில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த கலைஞர்கள்.புதுதி... மேலும் பார்க்க

கணவருடன் மீண்டும் இணையும் நடிகை நிக்கி கல்ராணி!

மரகத நாணயம் 2 ஆம் பாகத்தில் நடிகர் ஆதியின் மனைவி நிக்கி கல்ராணியும் நடிக்கவிருப்பதாக நடிகர் ஆதி கூறியுள்ளார்.நடிகர் ஆதியின் நடிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள சப்தம் திரைப்படம் வருகிற 28 ஆம் தேத... மேலும் பார்க்க