மானூா் அருகே லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே லாரி மோதி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (52). தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை மானூா் அருகே அழகியபாண்டிபுரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றாராம். அப்போது அவா் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.