செய்திகள் :

மூணாறு பேருந்து விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

post image

கேரள மாநிலம், மூணாறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில்,

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை கிழக்கு கிராமத்திலுள்ள தனியார் கல்லூரியில் பயின்றுவரும் 39 மாணவர்கள் மற்றும் 3 பேராசிரியர்கள் கேரளா மாநிலத்திற்கு பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்ற நிலையில் கடந்த 19 ஆம் தேதி மூணாறு பகுதியில் பேருந்து எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்குளம் வட்டம், திங்கள் நகர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி ஆர்.ஆத்திகா (20), அகஸ்தீஸ்வரம் வட்டம், கனகபுரம், அஞ்சு கிராமத்தைச் சேர்ந்த செல்வி.ஆர்.வேணிகா (20) ஆகிய இரண்டு மாணவியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்த திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், திருவரங்கனேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் செல்வன் செ.சுதன் நித்யானந்தன் (20) என்பவர்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில், காயமடைந்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவன் செல்வன் கெவின் எட்மர் இட்சோன் சுரேஷ் (20) என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ரூ.1 லட்சமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும்

உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!

அமெரிக்க எஃப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபின்னர் பல்வேறு அத... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக இன்று கார்கே, ராகுலை சந்திக்கும் அதிருப்தி தலைவா்கள்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க தில்ல... மேலும் பார்க்க

7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரன் கைது

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் பள்ளிக்கரணை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச. 23-ஆம் தே... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 பேரை சுட்டு பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். கிருஷ்ணகிரி மலைக்கு உறவினர்களுடன் சென்ற பெண்ணை 4 பேர் மிரட்டி ... மேலும் பார்க்க

கட்டுமான தொழிலாளி தற்கொலை: மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் கைது

ஏரியூா் அருகே கட்டுமான தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக இரண்டாவதாக சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீஸார் கைது செய்தனர்.தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெர... மேலும் பார்க்க

ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

ஒசூர்: ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும் என தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். ஒசூரில் த... மேலும் பார்க்க