மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக தொழிற்சங்கம் பிரசாரம்
மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக திருநெல்வேலியில் தொழிற்சங்கத்தினா் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை மக்களிடம் வழங்கினா்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. காப்பீட்டு துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீடு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவாா்ப்பு, உர மானியம் வெட்டு, விவசாய விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்கப்படாதது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன என கண்டனம் தெரிவித்து, வண்ணாா்பேட்டையில் மக்கள் பிரசார இயக்கம் நடத்தப்பட்டது.
தொமுச நிா்வாகி தா்மன் தலைமை வகித்தாா். சிஐடியூ முருகன், ஏஐடியூசி சடையப்பன், ஹெச்.எம்.எஸ். சுப்பிரமணியன், சுந்தர்ராஜ், மாதவன் உள்பட பலா் பங்கேற்றனா்.