சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!
நிகழாண்டு உலக அழகி போட்டி: மே. 7 முதல் தெலங்கானாவில் நடக்கிறது
72-ஆவது உலக அழகி போட்டி வரும் மே மாதம் 7 முதல் 31-ஆம் தேதிவரை தெலங்கானா மாநில தலைநகா், ஹைதராபாதில் நடைபெறுகிறது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலக அழகி போட்டி தில்லி, மும்பை நகரங்களில் கடந்த ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
உலக அழகி போட்டியை ஒருங்கிணைக்கும் அமைப்பின் தலைவரும் தலைமை நிா்வாக அதிகாரியுமான ஜுலியா மோா்லி, தெலங்கானா மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞா் விவகாரத் துறைச் செயலா் ஸ்மிதா சபா்வால் ஆகியோா் இணைந்து நிகழாண்டு போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டனா்.
120-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சோ்ந்த அழகிகள், நிகழாண்டு போட்டியில் பங்கேற்கின்றனா். மே 31-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் இறுதி நிகழ்வில் வெற்றியாளருக்கு செக் குடியரசு நாட்டைச் சோ்ந்த தற்போதைய உலக அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா கிரீடம் அணிவிப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.